சிங்கப்பூர் 4D லாட்டரியில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நடந்த குலுக்கலில் ‘2250’ என்ற எண் வெற்றி பெற்றது.
அந்த குறிப்பிட்ட வெற்றி எண்ணை சுமார் 50 மேற்பட்டோர் வாங்கியிருக்கலாம் என்றும், அவர்கள் பரிசுத் தொகையை வெற்றி பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
4D லாட்டரி மோகம்.. “7217” என்ற எண்ணுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் போட்டாபோட்டி – ஏன் தெரியுமா?
அது என்ன அந்த 2250 என்ற குறிப்பிட்ட எண்ணுக்கு மட்டும் இவ்வளவு மவுசு அதிகரித்தது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கும்.
அது, புளாக் 503A கான்பெரா லிங்க் கீழ்தளத்தில் வைக்கப்பட்ட சமய வழிபாட்டு பீடத்திலிருந்து பெறப்பட்ட அதிர்ஷ்ட எண் என்று ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.
சிங்கப்பூரில் அவ்வப்போது நடைபெறும் முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில் அங்கு காணப்படும்/ சொல்லப்படும் எண்கள் 4D லாட்டரியில் அதிகம் வாங்கப்படும்.
அந்த வகையில் ஓர் சமய விழாவிற்காக அந்தப் வழிபாட்டு பீடத்தில் வைக்கப்பட்ட 2250 என்ற எண் 4D லாட்டரியில் அதிகம் வாங்கப்பட்டது.
அதாவது அங்கு வந்த ஏராளமான பக்தர்களும், அந்த எண்ணைப் பார்த்த வழிப்போக்கர்களும் அந்த எண்ணுக்கு பந்தயம் கட்டியதாக நம்பப்படுகிறது.
சுமார் 50க்கும் மேற்பட்டோர் பரிசை வென்றுள்ளனர் என நம்புவதாக அந்த நிகழ்வின் குழு உறுப்பினர் மதிப்பிட்டார்.
ஏனெனில், சில நபர்கள் S$13,000 மற்றும் S$25,000 வரை வென்றதாக பரிசுத் தொகையைக் காட்டும் பந்தய லாட்டரி சீட்டுகளின் புகைப்படத்தை வெளியிட்டனர்.
மேலும்அதில் ஒருவர் S$60,000 வென்றார் என நம்பப்படுகிறது.
கடந்த சில நாட்களில் மட்டும் பழங்கள், பொம்மைகள் மற்றும் பிற காணிக்கைகளுடன் அங்கு வந்த 58 பக்தர்கள், தெய்வங்களுக்கு நன்றி செலுத்திவிட்டு சென்றதாக அந்த குழு உறுப்பினர் கூறினார்.
மேலும் அதில் நான்கு பக்தர்கள், சமய நிகழ்ச்சிகளுக்காக மொத்தம் S$13,000 க்கும் அதிகமாக தொகையை நன்கொடையாக அளித்தனர் என்றும் அவர் கூறினார்.
சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு

