சிங்கப்பூர் உள்துறை மற்றும் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சர் க. சண்முகம் அறிவிப்பு செய்த குறிப்பிட்ட எண்கள் 4D லாட்டரியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
சிங்கப்பூர் இணைய பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும், மேலும் UNC3886 என்னும் சைபர்ஸ்பேஸ் உளவு குழு தாக்குவதாக நேற்று ஜூலை 18 அன்று அமைச்சர் க. சண்முகம் கூறினார்.
சிங்கப்பூரில் வேலை… போலியான சான்றிதழ்கள் சமர்ப்பித்து சிக்கிய இரு வெளிநாட்டவர்கள்
4D லாட்டரி
அவர் அறிவித்த 24 மணி நேரத்திற்குள், 4D லாட்டரியில் 3886 என்ற எண் விற்றுத் தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இன்று ஜூலை 19 நிலவரப்படி, பெரிய மற்றும் சிறிய பந்தயங்களில் 3886 என்ற எண் விற்றுத் தீர்ந்ததாக சிங்கப்பூர் பூல்ஸ் (Singapore Pools) அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் தரவுகள் கூறுகின்றன.
வித்தியாசமான சிரிப்புக்குறிய இந்த செயல்பாடுகளை திரு. சண்முகம் கண்காணித்ததாகவும், அது குறித்து பேஸ்புக்கில் அவர் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
APT 3886 சைபர்ஸ்பேஸ் குழு தாக்குதல் பற்றி சிங்கப்பூரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அதை கூறியதாகவும், ஆனால் அது மிகவும் தீவிரமாகி 3886 என்ற 4D எண் விற்றுத் தீர வழிவகுத்துள்ளது என்றும் அவர் நகைப்புடன் குறிப்பிட்டார்.
இது போன்ற 4D லாட்டரி தொடர்பான சம்பவங்கள் சிங்கப்பூரில் முதல்முறை அல்ல, பல முறை இவ்வாறு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Photos: Singapore Pools & Mothership
சிங்கப்பூர் டோட்டோ, 4D-யில் அதிஷ்டத்தை நம்பும் மக்கள்: குறிப்பிட்ட கிளையில் மட்டும் கொட்டும் பரிசு