[ad_1]
சிங்கப்பூர் 4D லாட்டரியில் டாப் பரிசு தொகையை “9999” என்ற எண் முதன்முறையாக வென்றுள்ளது.
இந்த போட்டி நேற்று முன்தினம் செப்டம்பர் 3 ஆம் தேதி நடந்தது.சிங்கப்பூர் பூல்ஸ் நிறுவனம் 1986 மே மாதம் இந்த விளையாட்டை நடத்தத் தொடங்கியது, அதிலிருந்து ஒரேமாதிரியான எண்கள் டாப் பரிசு வெற்றி எண்ணாக வந்தது இதுவே முதல் முறை.
4D லாட்டரியில் 50 மேற்பட்டோர் வெற்றி… ‘2250’ என்ற அதிஷ்ட எண்ணுக்கு கொட்டிய பரிசு!
இதற்கு முன்பு “9999” வெற்றி எண்ணாக 14 முறை வந்துள்ளது, ஆனால் ஒருபோதும் முதல் பரிசை வென்றதில்லை.
அந்த 14 இல், எட்டு ஆறுதல் பரிசை வென்றது, ஆறு தொடக்க பரிசை வென்றது என்பது கூடுதல் தகவல்.
4D லாட்டரியை பொறுத்தவரை, “9999” போன்ற ஒரே மாதிரியான இலக்க எண்கள் வெற்றிபெறுவது என்பது மிகவும் அரிதான ஒன்று.
4D லாட்டரி மோகம்.. “7217” என்ற எண்ணுக்கு மட்டும் வாடிக்கையாளர்கள் போட்டாபோட்டி – ஏன் தெரியுமா?
“4444” என்ற எண்கள் மிகவும் அரிதானவை, இது எட்டு முறை மட்டுமே பரிசை வென்றுள்ளது. அதே போல, “6666”, “8888” மற்றும் “1111” ஆகிய எண்கள் இரண்டாவது இடத்தில் உள்ளன, இதுவரை 10 முறை மட்டுமே அவைகள் வெற்றி எண்ணாக வந்துள்ளன.
ஆனாலும், “1111”, “2222”, “5555”, “7777” மற்றும் “8888” ஆகிய எண்கள் இதுவரை முதல் பரிசை வெல்லவில்லை.
அடிக்கடி வெற்றி பெற்ற 4D லாட்டரி எண் “9395” ஆகும், அதாவது இது 28 முறை வெற்றி எண்ணாக வந்துள்ளது.
இதைத் தொடர்ந்து “5807” மற்றும் “6741” ஆகியவை 27 முறை வெற்றி எண்ணாக வந்துள்ளன.