தற்போது இந்த திட்டத்திற்கு 7.05 சதவீத வட்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், சீனியர் சிட்டிசன்களுக்கு 7.55 சதவீதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.65 சதவீதமும் கொடுக்கப்படுகிறது.
444 நாட்கள் (அம்ரித் விருஷ்டி) என்ற குறிப்பிட்ட கால அளவு திட்டம் 15 ஏப்ரல், 2025 முதல் 7.05% வட்டி விகிதத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது. சீனியர் சிட்டிசன்களுக்கு 7.55 சதவீதம் வட்டி விகிதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.65 சதவீத வட்டி விகிதமும் கொடுக்கப்படுகிறது என்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக ஜூலை 15, 2024 அன்று 444 நாட்களுக்கு ரீட்டைல் டேர்ம் டெபாசிட் திட்டத்தின் ஒரு வகையாக அம்ரித் விருஷ்டி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. யார் வேண்டுமானாலும் வங்கி கிளை, இன்டர்நெட் பேங்கிங் மற்றும் YONO அப்ளிகேஷன் மூலமாக அம்ரித் விருஷ்டி திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
SBI அம்ரித் விருஷ்டி தோராயமான கணக்கீடுகள்:
ஒரு நபர் SBIன் அம்ரித் விருஷ்டி திட்டத்தின் கீழ், 444 நாட்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் என்ற தொகையை 7.05 வட்டி விகிதத்தில் முதலீடு செய்து வந்தால், பின்வரும் ரிட்டன் அவருக்கு கிடைக்கும்.
மாத டெபாசிட்: 1000 ரூபாய்
வட்டி விகிதம்: 7.05% (ஒரு ஆண்டுக்கு)
கால அளவு: 444 நாட்கள் (14.8 மாதங்கள்)
வட்டியானது ரெக்கரிங் டெபாசிட் விதிகளின்படி கணக்கிடு செய்யப்படுகிறது. வழக்கமான ரெக்கரிங் டெபாசிட் ஃபார்முலா அடிப்படையில் கணக்கிடும் பொழுது, இறுதியாக 15,600 ரூபாய் முதல் 15,800 ரூபாய் வரை கிடைக்கும். இதில்
மொத்த டெபாசிட் தொகை: 14,800 ரூபாய்
பெறப்பட்ட வட்டி: 800 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை
இறுதி ரிட்டன்: 15,600 ரூபாய் முதல் 15,800 ரூபாய் வரை
ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை குறைத்த SBI:
அதே சமயத்தில், குறிப்பிட்ட சில கால அளவுகள் கொண்ட ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை குறைத்து இருப்பதாகவும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்டு சில டேர்ம் டெபாசிட்களுக்கு குறிப்பாக 1 முதல் 3 வருட கால அளவு கொண்ட டெபாசிட்களுக்கான வட்டி விகிதங்களை 10 பேசிஸ் புள்ளிகள் வரை குறைத்துள்ளது. மேலும் இது வழக்கமான கஸ்டமர்கள் மற்றும் சீனியர் சிட்டிசன்கள் ஆகிய இருவருக்கும் பொருந்தும்.
Chennai [Madras],Chennai,Tamil Nadu
April 28, 2025 5:48 PM IST
444 நாட்கள் அம்ரித் விருஷ்டி திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்த SBI… வட்டி விகிதங்கள் என்ன தெரியுமா?