அமெரிக்காவின் ஓஹியோவிலிருந்து மார்ச் 23, 1980 அன்று, பாரெட் என்ற 24 வயது பெண், கல்லூரி நண்பர்களுடன் புளோரிடாவின், டேடோனா கடற்கரைக்குச் சென்றிருக்கிறார். அதே நாள், டேடோனா பீச் ட்ரெஷர் ஐலேண்ட் ஹோட்டலிலிருந்து, பாரெட் அடையாளம் தெரியாத ஒருவரால் கடத்தப்பட்டார். கடத்தப்பட்டதற்கு அடுத்த நாள், புளோரிடாவின் ஜாக்சன் வில்லியில், பாரெட்டின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து நடந்த பிரேத பரிசோதனையில், பாரெட் `மரண தண்டனை” பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை, பல வருடங்களாக நடைபெற்று வந்தது. 2017-ம் ஆண்டில், பாரெட் தன் மரணத்தை எதிர்த்து, தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான எந்த முயற்சிகளும் செய்யவில்லை என்பது விசாரணையில் உறுதியானது.
இதற்கிடையில், பாரெட்டின் நண்பர்கள் அளித்த அடையாளத்தின்படி அடிப்படையில், ஓர் உருவம் வரையப்பட்டது. அதன் மூலம், இந்த வழக்கும் விசாரிக்கப்பட்டு வந்தது.