பெர்முடா டிரையாங்கிள் உலகின் மிகவும் மர்மமான பகுதியாக கருதப்படுகிறது. காரணம் அந்த பகுதியில் பயணித்த சில விமானங்கள் மர்மமான முறையில் மாயமான சம்பவங்கள் தான். இதேபோல இத்தாலியில் 104 பயணிகளுடன் சுரங்கப்பாதைக்குள் நுழைந்த ரயில் மீண்டும் வெளியே வரவில்லை. இதை அந்த ரயிலில் இருந்து தப்பித்த 2 பயணிகள் நேரில கண்டு அதிர்ந்துபோயுள்ளனர்.
இதேபோல ஒரு மர்மமான சம்பவம் தான் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. 43 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் தொலைந்துப்போன ரயில் ரேக், இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு சுமார் 3,100 கிலோ மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அசாமின் கிழக்கு மாவட்டமான தின்சுகியாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஆப்ரிக்கா பிராந்தியத்தில் காடுகளின் வரைபடத்தை தயாரித்தது கவனத்தை ஈர்த்தது. தின்சுகியாவில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு ரயில் நிலையம் அருகே உள்ள காடுகளை நாசா, செயற்கைகோள் மூலம் படம் எடுத்தது. அந்த படங்கள் வெளியாகி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தன. காரணம், அந்த புகைப்படங்களை பகிர்ந்த நாசா தின்சுகியா காடுகளில் ஏவுகணை (ICBM) மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியது.
இந்தியாவின் ஏவுகணை (ICBM) காட்டில் மறைந்ததா? :
ICBM என்பது போர்கலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு ஏவுகணை. இது 5,500 கிலோ மீட்டர் வரை துல்லியமாக தாக்கும் சக்தி வாய்ந்தது. இந்த வகையான ஏவுகணைகள் இந்தியாவை தவிர அமெரிக்கா, வட கொரியா, சீனா, ரஷ்யா, மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளிடம் உள்ளன. இந்நிலையில் தின்சுகியா காடுகளில் ஏவுகணை மறைந்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, இந்தியா உண்மையாகவே இப்படி ஒரு ரயிலை மறைத்து வைத்திருக்குமா என்ற கேள்வி உலக நாடுகளிடையே எழுந்தது. ரயில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா புகைப்படங்களை பகிர்ந்த நிலையில், ரஷ்யா மற்றும் சீனாவை சேர்ந்த உளவாளிகள் இந்த ரயில் ரேக்கை தேட தொடங்கியதாக கூறப்படுகிறது.
தேடுதல் வேட்டையை தொடங்கிய இந்தியா :
தின்சுகியா காடுகள் மீது வெளிநாட்டு செயற்கைக்கோளின் செயல்பாடுகள் இந்திய ஏஜென்சிகளை ஆச்சரியமடைய செய்தன. இதனை தொடர்ந்து பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு, தேசிய புலனாய்வு முகமை, பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்டவை தேடுதல் வேட்டையில் இறங்கின. தேடுதல் வேட்டையின் பயணாக அமெரிக்கா வெளியிட்ட புகைப்படங்களின் அடிப்படையில் காட்டுக்குள் ரயில் ரேக் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த ரயில் ரேக் மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகரில் இருந்து அசாமில் உள்ள டின்சுகியா ரயில் நிலையத்திற்கு கடந்த 1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. பின்னர் அது ரயில் நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள முற்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரயிலின் இன்ஜினை மற்றொரு ரேக் எடுத்துச் சென்றுள்ளது. இந்த ரயில் தின்சுகியா வந்தடைந்த போது அங்கு தொடர் கனமழை பொழிந்துள்ளது. கனமழை காரனமாக அப்பகுதி மழை நீர் சூழ்ந்து வெள்ளக்காடாக இருந்துள்ளது. தின்சுகியா ரயில் நிலையமும் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
இதையும் படிங்க : உலகிலேயே ஒரு நதி கூட இல்லாத நாடு எது தெரியுமா? 90% பேருக்கு இது தெரியாது!
ரயில்வே பதிவுகளின்படி ரயில் கடந்த ஜூன் 16, 1976 ஆம் ஆண்டு காலை 11:08 மணிக்கு ரயில், தின்சுகியா சென்றடைந்துள்ளது. பின்னர் இன்ஜின், ரேக்கில் இருந்து பிரிக்கப்பட்டுள்ளது. அப்போது சரியாக 11:31 மணி அளவில் பலத்த மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போக்குவரத்தை சீரமைப்பது, தண்டவாளத்தை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ரயில் பெட்டியை அங்கிருந்து கொண்டுவர அவர்கள் மறந்துவிட்டனர். பின்னர் ஊழியர்கள் வெவ்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ரயில் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…