நாடு முழுவதும் திட்டமிட்ட வகையில் தமிழ் இனத்தின் மீது 1983 ஆம் ஆண்டு ஆடி
மாதம் 23ஆம் திகதி கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல்
வாரத்தின் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட போராளிகளையும்
பல்லாயிரக் கணக்கான பொது மக்களையும் நினைவுகூரும் நினைவேந்தல் மன்னாரில் இடம்பெற்றது.
தமிழீழ விடுதலை இயக்கம் கட்சியின் ஏற்பாட்டில் மன்னாரிலுள்ள ரெலோ அலுவலகத்தில் நேற்று (26) மாலை 43 ஆம் ஆண்டு தமிழ் தேசிய வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
கட்சியின் மாவட்ட பொறுப்பாளரும், மன்னார் நகர முதல்வருமான டானியல் வசந்தன்
தலைமையில் இடம்பெற்ற குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கட்சியின்
உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி
இதன் போது குட்டிமணி, தங்கத்துரை உள்ளடங்கலாக 53 அரசியல்
கைதிகளுக்கும், பொது மக்களுக்குமான நினைவேந்தல் இடம்பெற்றது.
அந்தவகையில் குட்டிமணி, தங்கத்துரை ஆகிய இருவரின் திருவுருவப்படத்திற்கு மாலை
அணிவித்து சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்துடன் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு அஞ்சலி
செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

