Last Updated:
India vs England | லார்ட்ஸ் டெஸ்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி. ஜடேஜா 61 ரன்கள் எடுத்தார்.
லார்ட்ஸ் கிரிக்கெட்டில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தது. லார்ட்டிஸ் குறைந்த இலக்கை இந்திய அணி எட்டாமல் தோல்வியை சந்தித்தற்கு முக்கிய காரணம் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடமல் போனதே ஆகும்.
ரவீந்திர ஜடேஜா கடைசி வரை போராடி களத்தில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 181 பந்துகளை சந்தித்த ஜடேஜா, அதாவது 30 ஓவர்களை எதிர்கொண்ட அவர் 61 ரன்கள் எடுத்திருந்தார். ஜடேஜாவிற்கு உறுதுணையாக ஒரு வீரர் நிலைத்து இருந்தால் இந்திய அணி வெற்றி வாகை சூடி இருக்கும்.
இந்திய அணியில் டாப் ஆர்டரில் கே.எல்.ராகுலை தவிர மற்ற யாரும் நிலைத்து நின்ற ஆடவில்லை. டெஸ்ட் அணியில் வாய்ப்புக்காக பல ஆண்டுகள் காத்திருந்த கருண் நாயர் 3 டெஸ்ட்களில் கிடைத்த 6 இன்னிங்சையும் கோட்டைவிட்டார். அதிரடி காட்டுகிறேன் என ஜெய்ஸ்வால் 2 இன்னிங்சிலும் ஆர்ச்சர் பவுலிங்கில் சிக்கி சிதைந்தார். லார்ட்ஸ் என்றாலே சுப்மன் கில்லுக்கு ராசி இல்லை என்ற சோகம் இந்த டெஸ்டிலும் தொடர்ந்தது.
193 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 41 ரன்கள் வரை ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது. அதுவரை போட்டி இந்தியா பக்கம் இருந்த நிலையில் கருண் நாயர் அவுட்டாக தொடங்கியதும் இந்தியா அடுத்து 41 ரன்களுக்கு 6 விக்கெட்களை பறிகொடுத்து 82-7 என்ற பரிதாப நிலையில் இருந்தது. இதுவே இங்கிலாந்து அணி வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ரவிந்தீர ஜடேஜாவின் அற்புதமான ஆட்டமும் போராட்டமும் இங்கிலாந்தின் வெற்றியை நீண்ட ஓவர்களுக்கு காத்திருக்க வைத்தது. முகமது சிராஜ் அவுட்டானது இங்கிலாந்து அணிக்கு கிடைத்த அதிர்ஷ்டமாகவே பார்க்கப்படுகிறது. பேட்ஸ்மேன்கள் அதிக பந்துகளை தடுப்பாட்டம் விளையாடும் போது இதுப்போன்று அரிய முறையில் அவுட்டாவது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. லார்ட்ஸில் வரலாற்று வெற்றியை பதிவு செய்ய வேண்டிய இந்தியா டாப் ஆர்டர்களின் சொதப்பலான ஆட்டத்தால் வெற்றியை பறிகொடுத்தது. இதையடுத்து அடுத்த டெஸ்டில் இந்திய அணி கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளதால் ஆடும் லெவனில் மிகப் பெரிய மாற்றம் இருப்பதாகவே தெரிகிறது.
July 15, 2025 9:31 AM IST


