• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா பயணிக்க தடை? | 41 Countries On Trumps Radar For Potential Travel Ban

GenevaTimes by GenevaTimes
March 16, 2025
in உலகம்
Reading Time: 5 mins read
0
41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா பயணிக்க தடை? | 41 Countries On Trumps Radar For Potential Travel Ban
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதிய தடை விதிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்கு விரைவில் தடை விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தங்களுக்கு கிடைத்த வரைவு அறிக்கையின் அடிப்படையில் ராய்ட்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த வரைவு அறிக்கையில் மொத்தம் 41 நாடுகள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் முதல் குழுவில் ஆப்கானிஸ்தான், ஈரான், சிரியா, கியூபா, வடகொரியா உள்ளிட்ட 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதை முற்றிலும் நிறுத்திவைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து இரண்டாவது குழுவில் எரித்ரியா, ஹைதி, லாவோஸ், மியான்மர், தெற்கு சூடான் ஆகிய 5 நாடுகள் உள்ளது. இந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவது பகுதி அளவில் நிறுத்தி வைக்கப்படும். சுற்றுலா, மாணவர் விசாக்கள் மற்றும் பிற புலம்பெயர்வு விசா பெறுவதை இது பாதிக்கும்.

மூன்றாவது குழுவில், பாகிஸ்தான், பூட்டான், மியான்மர் உள்ளிட்ட 26 நாடுகள் உள்ளன. இந்த நாடுகளின் அரசுகள் 60 நாட்களுக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கவில்லை என்றால் அமெரிக்க விசா வழங்கலை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

இதுகுறித்து பெயர் கூறவிரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்தப் பட்டியலில் மாற்றம் ஏற்படலாம். இந்தப் பட்டியலுக்கு வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ உட்பட அரசு நிர்வாகம் இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை” என்றார்.

அமெரிக்காவின் 47-வது அதிபராக ட்ரம்ப் கடந்த ஜனவரியில் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் முதல்முறையாக பதவி வகித்தபோது முஸ்லிம் பெரும்பான்மையாக வசிக்கும் 7 நாடுகளின் மக்களுக்கு பயணத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்தது! | Gold Price Drops by Rs.640 Per Pound!

Next Post

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒவைசியை நாடு கடத்துவோம்: பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை | If we comes to power we will deport Owaisi BJP MLA speech creates controversy

Next Post
பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒவைசியை நாடு கடத்துவோம்: பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை | If we comes to power we will deport Owaisi BJP MLA speech creates controversy

பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒவைசியை நாடு கடத்துவோம்: பாஜக எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை | If we comes to power we will deport Owaisi BJP MLA speech creates controversy

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin