முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் தமிழீழ விடுதலைப்புலிகளால் சித்திரவதைக்கு உள்ளாகி புதைக்கப்பட்ட 4000 பேரின் உடல்கள் இருப்பதாக கூறி குறித்த பகுதிக்கு விஜயம் செய்த அருண் சித்தார்த், பொதுமக்களால் பகிரங்கமாக வெளியேற்றப்பட்டுள்ளார்.
யாழ். சிவில் சமூகம் என்ற பெயரில் பதியப்படாத அமைப்பை அருண் சித்தார்த் இயக்கிவருவதாகவும், தமிழ் தேசியத்துக்கு எதிராக செயற்பாடுகளை அவர் முன்னெடுப்பதாகவும் தொடர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவ்வாறான ஒரு நோக்கத்தில் செம்மணி புதைக்குழி விவகாரத்தை திசை திருப்ப போலியான குற்றச்சாட்டோடு துணுக்காய் பகுதிக்கு சென்ற அவர் தற்போது பொதுமக்களால் விரட்டியடிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |