அவர் கூறும்போது, “முன்னாள் பாகிஸ்தான் கேப்டனும், புகழ்பெற்ற ஆல்-ரவுண்டருமான இம்ரான் கானின் தலைமையில் விளையாட தனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், தனது விக்கெட் எண்ணிக்கை முற்றிலும் வேறுபட்டதாக இருந்திருக்கும். இம்ரான் கானின் கேப்டன்சிக்குக் கீழ் விளையாடாததுதான் தனது மிகப்பெரிய வருத்தம். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டிருப்பேன். அவரது கேப்டன்சிக்குக் கீழ் விளையாடியிருந்தால், டெஸ்ட் கிரிக்கெட்டில் குறைந்தபட்சம் 400 விக்கெட்டுகளையாவது எடுத்திருப்பேன் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

