பொதுவாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் விக்கெட் எடுத்தால் ஆரவாரம் செய்வார்கள். கொண்டாடுவார்கள். ஆனால், இந்த பவுலர், விக்கெட் எடுக்கும்போது கொண்டாடுவதில்லை. ஆரவாரம் செய்வதில்லை. அவர் தான் பந்துவீச்சாளர் புவனேஷ்குமார். டி20 கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு பந்தும் முக்கியமானது. ஆனால், அந்த போட்டி வடிவம் பெரும்பாலும், பேட்ஸ்மேன்களுக்கான ஆட்டமாகவே கருதப்படுகிறது.


