நாட்டின் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் மேலும் 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
“ஹோட்டல் ஷோ கொழும்பு 2025” கண்காட்சி இன்று காலை கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW