லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் 6-1, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் 52-ம் நிலை வீரரான ஸ்பெயினின் பெட்ரோ மார்ட்டின்ஸை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் 7-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் 55-ம் நிலை வீராங்கனையான ஹெய்லி பாப்டிஸ்டை தோற்கடித்து 4-வது சுற்றில் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் 19-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் லியுட்மிலா சம்சோனாவா 6-2, 6-3 என்ற நேர் செட் கணக்கில் 18-ம் நிலை வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் தரியா கசட்கினாவை வீழ்த்தினார்.