• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“4 லட்சம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நாடு” – ஐநாவில் பாக். மீது இந்தியா குற்றச்சாட்டு | Pakistan is a country that has genocided 400,000 women of its own country – India accuses the UN

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in உலகம்
Reading Time: 6 mins read
0
“4 லட்சம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நாடு” – ஐநாவில் பாக். மீது இந்தியா குற்றச்சாட்டு | Pakistan is a country that has genocided 400,000 women of its own country – India accuses the UN
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நியூயார்க்: “சொந்த நாட்டுப் பெண்கள் 4 லட்சம் பேரை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நாடு பாகிஸ்தான்” என்று ஐநா பாதுகாப்பு அவையில் நடைபெற்ற விவாதத்தில் இந்தியா குற்றம் சாட்டியது.

ஐநாவுக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதி சைமா சலீமின் பேசும்போது, “ஜம்மு காஷ்மீரை சுட்டிக்காட்டி இந்தியாவுக்கு எதிராகப் பேசினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ், துரதிருஷ்டவசமாக ஒவ்வொரு ஆண்டும் எனது நாட்டுக்கு எதிராக குறிப்பாக அவர்கள் (பாகிஸ்தான்) விரும்பும் எங்கள் ஜம்மு காஷ்மீருக்கு எதிராக பாகிஸ்தான் பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதை கேட்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

பெண்கள், அமைதி, பாதுகாப்பு விஷயத்தில் எங்களின் சாதனை தன்னிகரில்லாது, கறையற்றது. தனது சொந்த மக்களுக்கு எதிராக குண்டுவீசி இனப்படுகொலையை நடத்தும் ஒரு நாடு, தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள் மூலம் உலகை திசைதிருப்ப முயல்கிறது.

1971-ல் கிழக்கு பாகிஸ்தானில், பாகிஸ்தான் நடத்திய ஆபரேஷன் சர்ச்லைட் ராணுவ நடவடிக்கையின்போது பல லட்சம் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (30 லட்சம் பேர் என வங்கதேச அரசு குறிப்பிடுகிறது), 4 லட்சம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். இப்படி ஒரு திட்டமிட்ட இனப்படுகொலையை அனுமதித்த நாடு பாகிஸ்தான். இன்று அந்த நாடு எத்தகைய பிரச்சாரத்தை மேற்கொள்கிறது என்பதை உலகம் பார்க்கிறது” என தெரிவித்தார்.

ஆயுத மோதல்களின்போது பெண்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் விவகாரத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இதற்கான தீர்மானம் ஐநா பாதுகாப்பு அவையில் கடந்த 2000-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. அதன் 25-ம் ஆண்டை முன்னிட்டு பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதம் முன்னெடுக்கப்பட்டது. இதில், பாகிஸ்தான் பிரதிநிதி இந்தியாவுக்கு எதிராகப் பேசியதை அடுத்து, இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது.



Read More

Previous Post

Gold Price Drop | ஒரே நாளில் கிடுகிடுவென சரிந்து தலைகீழாக மாறிய தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன? | வணிகம்

Next Post

மற்றவர்கள் பேச்சை கேட்காமல் சொந்த சிந்தனையைப் பின்பற்றுவீர் – முஹிடினுக்கு பெர்சத்து தலைவர் வலியுறுத்தல் | Makkal Osai

Next Post
மற்றவர்கள் பேச்சை கேட்காமல் சொந்த சிந்தனையைப் பின்பற்றுவீர் – முஹிடினுக்கு பெர்சத்து தலைவர் வலியுறுத்தல் | Makkal Osai

மற்றவர்கள் பேச்சை கேட்காமல் சொந்த சிந்தனையைப் பின்பற்றுவீர் - முஹிடினுக்கு பெர்சத்து தலைவர் வலியுறுத்தல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin