• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

4 முறை அழைத்தும் பேச மறுத்த பிரதமர் மோடி: ட்ரம்ப் கடும் பதற்றமாகி இருப்பதாக தகவல் | PM Modi refuses to speak despite being Trump called 4 times

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
4 முறை அழைத்தும் பேச மறுத்த பிரதமர் மோடி: ட்ரம்ப் கடும் பதற்றமாகி இருப்பதாக தகவல் | PM Modi refuses to speak despite being Trump called 4 times
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: வர்த்தக வரி தொடர்​பாக பேச அமெரிக்க அதிபர் 4 முறை தொலைபேசி​யில் அழைத்​தும் பிரதமர் மோடி பேச மறுத்​த​தாக ஜெர்​மனி, ஜப்​பான் பத்​திரி​கைகள் செய்தி வெளி​யிட்​டுஉள்​ளன.

உலக நாடு​களுக்கு அதிக வரி விதித்து வரும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்​தி​யா​வுக்கு 25 சதவீத வரியை விதித்​தார். அத்​துடன், உக்​ரைன் மீது தாக்​குதல் நடத்தி வரும் ரஷ்​யா​விடம் இருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வ​தால், கூடு​தலாக 25 சதவீத வரியை ட்ரம்ப் அறி​வித்​தார். அதன்​படி, இந்​தி​யா​வில் இருந்து அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு மொத்​த​மாக 50 சதவீத வரி விதிக்​கப்​பட்​டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்​துள்​ளது.

ஆனால், வர்த்தக வரி விதிப்பு தொடர்​பாக அமெரிக்​கா​வின் நிர்​பந்​தத்​துக்கு அடிபணிய மாட்​டோம். எவ்​வளவு நெருக்​கடிகள் வந்​தா​லும் இந்​திய விவ​சா​யிகள், சிறு வணி​கர்​களை பாதிக்​க​விட மாட்​டேன் என்று பிரதமர் மோடி திட்​ட​வட்​ட​மாக கூறி விட்​டார். அமெரிக்​கா​வின் வரி விதிப்​பால் இந்​திய ஏற்​றும​தி​யாளர்​களுக்கு பாதிப்பு ஏற்​படும். அதை சரி​கட்ட பல்​வேறு திட்​டங்​களை மத்​திய அரசு எடுத்து வரு​கிறது.

இந்​நிலை​யில் வரி தொடர்​பாக பிரதமர் மோடி​யிடம் பேச்​சு​வார்த்தை நடத்த கடந்த சில வாரங்​களில் அதிபர் ட்ரம்ப் 4 முறை தொலைபேசி​யில் அழைத்​த​தாக​வும் பிரதமர் மோடி பேச மறுத்​து​விட்​ட​தாக​வும் ஜெர்​மனி​யின் பிராங்க்​பர்ட் நகரில் இருந்து இருந்து வெளிவரும் பிரபல ‘அல்​லெஜிமெய்ன் ஜெய்​டங்’ என்ற பத்​திரிகை செய்தி வெளி​யிட்​டுள்​ளது. இதே​போல், ட்ரம்​பிடம் பேச மோடி மறுத்​து​விட்​ட​தாக ஜப்​பானில் இருந்து வெளிவரும் ‘நிக்கீ ஏசி​யா’ பத்​திரி​கை​யும் செய்தி வெளி​யிட்​டுள்​ளது.

இதற்​கிடை​யில், இந்த தகவலை உறு​திப்​படுத்த அமெரிக்​கா​வின் வெள்ளை மாளிகை அதி​காரி​கள் மறுத்​து​விட்​டனர். அதே​நேரத்​தில் பத்​திரி​கை​களில் வெளிவந்​துள்ள செய்​தி​களை மறுக்​க​வும் இல்​லை. இதுகுறித்து இந்​தி​யா​வின் முக்​கிய தூதரக அதி​காரி ஒரு​வர் கூறும்​போது, “முக்​கிய விவ​காரங்​களில் தொலைபேசி​யில் பேசுவது பிரதமர் மோடி​யின் பாணி இல்​லை” என்​றார். மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறும்​போது, “ட்​ரம்​பிடம் பேசி​னால், ஊகங்​களின் அடிப்​படை​யில் தகவல்​கள் திரித்து வெளி​யிடப்​படு​கின்​றன. அதை தவிர்க்க ட்ரம்​பிடம் பிரதமர் மோடி பேசுவதை தவிர்த்​திருக்​கலாம். ஏனெனில், இந்​தியா – பாகிஸ்​தான் போரின் போது ட்ரம்ப் கூறிய கருத்​துகளை மனதில் வைத்து அவரது தொலைபேசி அழைப்பை தவிர்த்​திருக்​கலாம்” என்​றனர்.

ஆபரேஷன் சிந்​தூரின் போது, இந்​திய – பாகிஸ்​தான் இடையே அணுஆ​யுத போராக மாறு​வதாக இருந்​தது. அதை நான்​தான் தடுத்​தேன் என்று ட்ரம்ப் கூறி வரு​கிறார். அத்​துடன், சர்​வ​தேச அளவில் 7 போர்​களை நிறுத்தி இருக்​கிறேன் என்​றும் ட்ரம்ப் கடந்த சில நாட்​களுக்கு முன்​னர் கூறி​னார். இந்​நிலை​யில், இந்​தியா – அமெரிக்கா இடையே வர்த்தக வரி தொடர்​பாக மோதல் ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், பிரதமர் மோடி பேச மறுத்​துள்​ள​தால், அதிபர் ட்ரம்ப் கடும் பதற்​ற​மாகி இருப்​ப​தாக கூறப்​படு​கிறது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் ரகசிய கடிதம்: சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அண்மையில் ரகசிய கடிதத்தை அனுப்பினார். அந்த கடிதத்தில் அமெரிக்காவின் வரி விதிப்பு போரை, இந்தியாவும் சீனாவும் இணைந்து முறியடிப்பது தொடர்பான ஆலோசனைகளை அதிபர் ஜி ஜின்பிங் முன்மொழிந்து உள்ளார். உலகத்தின் நன்மைக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

ரகசிய கடிதத்தை தொடர்ந்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனாவுக்கு சென்று அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இதைத் தொடர்ந்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ டெல்லிக்கு வந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

எல்லைப் பிரச்சினை காரணமாக இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுடன் சீனா மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தது. தற்போது தைவானை தவிர்த்து அனைத்து அண்டை நாடுகளுடனும் நட்புறவைப் பேண சீனா முடிவு செய்திருக்கிறது. இது மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Read More

Previous Post

Tamilmirror Online || கடற்றொழிலுக்குச் சென்ற இளைஞர் மாயம்

Next Post

இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி | Praggnanandhaa qualifies for the final

Next Post
இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி | Praggnanandhaa qualifies for the final

இறுதிப் போட்டிக்கு பிரக்ஞானந்தா தகுதி | Praggnanandhaa qualifies for the final

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin