பொதுத்துறை வங்கிகளின் இரண்டாவது சுற்று இணைப்புக்கான பணிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாகவும், 4 சிறிய வங்கிகளை இணைப்பதற்கான திட்டத்தை பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஆண்டு நிகர வருமானம் அடிப்படையில் மிகவும் சிறியதாக இருக்கும் வங்கிகளை மத்திய அரசு இணைத்து வருகிறது. அதன்படி, முதலில் UCO வங்கி, பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா, பஞ்சாப் & சிந்து வங்கி மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை இணைக்கப்பட வாய்ப்புள்ளது.
இரண்டாவதாக, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி அல்லது இந்தியன் வங்கியுடன் இணைக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த இணைப்புக்காக, வங்கி ஒழுங்குமுறை திருத்தச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்ய அரசு தயாராகி வருகிறது.
யூகோ வங்கி மற்றும் பஞ்சாப் & சிந்து ஆகியவற்றின் செயல்பாடு 2 – 3 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளது. அதே நேரத்தில் மகாராஷ்டிரா வங்கி, சென்ட்ரல் வங்கியின் செயல்பாடும் மேம்பட்டுள்ளது.
இதையும் படிக்க:
ஒருவர் எத்தனை வங்கிக் கணக்கு வைத்திருக்கலாம்? உங்களுக்குத் தெரியுமா?
பஞ்சாப் & சிந்து வங்கியின் 98.25% பங்குகள் அரசிடம் உள்ளது. மத்திய வங்கியில் 93.08% பங்குகளையும், மகாராஷ்டிரா வங்கியில் 86.46% பங்குகளையும், யூகோ வங்கியில் 95.39% பங்குகளையும் அரசு வைத்திருக்கிறது.
2019ஆம் ஆண்டில் 10 வங்கிகளை இணைத்த மத்திய அரசு, இரண்டாவது முறையாக வங்கிகளை இணைப்பதன் மூலம் அதன் சேவையை விரிவுபடுத்த முடியும் என்று நம்புகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
