ஆர்.சி.பி. அணிக்கு எதிரான மேட்ச்சில் வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் மேட்ச்சில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகின்றனர். இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங்கை தேர்வு செய்தது. கடந்த சில போட்டிகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணியின் கிளென் மேக்வெல்லுக்கு பதிலாக பெர்கூசன் அணியில் இடம்பெற்றார்.
சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களத்தில் இறங்கினர். இருவரும் ஒவ்வொரு ஓவர்களிலும் சிக்சர், பவுண்டரிகளை விளாச ஸ்கோர் விறுவிறுவென எகிறத் தொடங்கியது.
குறிப்பாக டிராவிஸ் ஹெட் சின்னசாமி மைதானத்தில் சிக்சர் மழை பொழிந்தார். தலா 2 சிக்சர், பவுண்டரியுடன் 34 ரன்கள் சேர்த்த அபிஷேக் சர்மா ஆட்டமிழக்க அடுத்து வந்த கிளாசனும் அதிரடியை தொடர்ந்தார்.
8 சிக்சர், 9 பவுண்டரிகளை பறக்க விட்ட டிராவிஸ் ஹெட் வெறும் 39 பந்துகளில் சதம் அடித்து சன்ரைசர்ஸ் ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அடிக்கப்பட்ட 4 ஆவது சதமாக இது அமைந்தது. தொடர்ந்து விளையாடிய ஹெட் 41 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
முன்னதாக 2013 இல் ஆர்சிபி வீரர் கிறிஸ் கேல் புனே அணிக்கு எதிராக 30 பந்துகளில் சதம் அடித்தார். இதுவே மிக குறைந்த பந்துகளில் அடிக்கப்பட்ட சதம். 2010 இல் ராஜஸ்தான் வீரர் யூசுப் பதான் 37 பந்துகளில் மும்பைக்கு எதிராக சதம் அடித்தார். 2013 இல் டேவிட் மில்லர் ஆர்சிபிக்கு எதிராக 38 பந்துகளிலும், இன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் ஆர்சிபிக்கு எதிராகவும் சதம் அடித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)