• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

38 பந்துகளில் 113 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா… நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 27, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
38 பந்துகளில் 113 ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா… நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 27, 2026 7:14 PM IST

ராக்கெட் வேகத்தில் ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 11 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

News18
News18

நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி நியுசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில் 3 ஆவது மேட்ச் இன்று வெலிங்டனில் நடைபெற்றது.

டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டிம் சைபர்ட், பின் ஆலன் களம் இறங்கினர்.

டிம் 2 ரன்னில் ஆட்டமிழக்க பின் ஆலன் 5 சிக்சர்களுடன் 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து வெளியேறினார். டேரில் மிட்செல் 89 ரன்களும், கிளென் பிலிப்ஸ் 17 ரன்களும் பெவோன் ஜேக்கப்ஸ் 39 ரன்களும் சேர்க்க நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், நிதிஷ் குமார் ரெட்டி தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.

இந்த போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கிய வைபவ் சூர்யவன்ஷி 19 பந்துகளில் தலா 4 பவுண்டரி சிக்சர்கள் அடித்து 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 18 ரன்களும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 5 ரன்களும் எடுத்தனர்.

மறுமுனையில் ராக்கெட் வேகத்தில் ரன்கள் குவித்த அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 11 சிக்சர் மற்றும் 8 பவுண்டரியுடன் 113 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.  ஏற்கனவே 2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த போட்டியிலும் வென்றதால் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Read More

Previous Post

Diwali 2026:வெயிட்டிங் லிஸ்ட் 100 தாண்டினாலும் கன்பார்ம் சீட் பெறலாம்! IRCTC-யின் இந்த வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்..

Next Post

Jio IPO Allotment: நாளை லிஸ்டிங்! பங்குகளை விற்கலாமா அல்லது கைவசம் வைக்கலாமா? நிபுணர்கள் கணிப்பு! | வணிகச் செய்திகள்

Next Post
Jio IPO Allotment: நாளை லிஸ்டிங்! பங்குகளை விற்கலாமா அல்லது கைவசம் வைக்கலாமா? நிபுணர்கள் கணிப்பு! | வணிகச் செய்திகள்

Jio IPO Allotment: நாளை லிஸ்டிங்! பங்குகளை விற்கலாமா அல்லது கைவசம் வைக்கலாமா? நிபுணர்கள் கணிப்பு! | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin