Last Updated:
இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என்றும், நாட்டின் ஆராய்ச்சித் துறைக்கு இது ஒரு மைல்கல் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
3 ஆவதுசர்வதேச உயிரியல் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய மாணவர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
லிதுவேனியாவின் வில்னியஸ் நகரில் நடைபெற்ற 37-வது சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்ற 4 இந்திய மாணவர்கள் அடங்கிய குழு, 1 தங்கம் உட்பட அனைத்துப் பிரிவுகளிலும் பதக்கங்களை வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது.
இப்போட்டியில் பங்கேற்ற அனைத்து இந்திய மாணவர்களும் பதக்கம் வென்று 100% சாதனையைப் பதிவு செய்துள்ளனர். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பாராட்டி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பவ்யா குன்வால், சௌமில் மைதி, நிஷித் கல்யாணி மற்றும் அன்மோல் குமார் ஆகிய நான்கு இளம் மாணவர்களின் அசாதாரணத் திறமையையும் மற்றும் பாடப் பிரிவுகளின் மீதான ஆழமான அறிவையும் அவர் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
குறிப்பாக மூலக்கூறு உயிரியல், உயிர்வேதியியல் (Biochemistry), விலங்கு உடலியல், விலங்கு உருவவியல், மற்றும் தாவர கணக்கீட்டு உயிரியல் போன்ற மிகவும் கடினமான மற்றும் சிக்கலான பிரிவுகளில் மாணவர்கள் வெளிப்படுத்திய அபார திறனைப் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய அளவில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் இளைஞர்களின் ஆர்வத்தை அதிகரிக்க இதுபோன்ற ஒலிம்பியாட் போட்டிகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன.
It is a matter of immense happiness that in the 37th International Biology Olympiad held in Vilnius, Lithuania, all four Indian team members secured medals, including one Gold.
Proud of Bhavyaa Gunwal, Soumil Maity, Nishit Kalani and Anmol Kumar for their success at the… pic.twitter.com/8KNqqhgFbM— Narendra Modi (@narendramodi) July 19, 2026
கடுமையான பயிற்சிகள் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் மூலம் சாதிக்கப்பட்ட இந்த வெற்றி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையை நோக்கி அடியெடுத்து வைக்க விரும்பும் எண்ணற்ற இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும் என்றும், நாட்டின் ஆராய்ச்சித் துறைக்கு இது ஒரு மைல்கல் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


