• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

34 வருடங்களுக்கு பிறகு தொடரை வென்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி சாதனை! | west indies record odi seires victory after 34 years

GenevaTimes by GenevaTimes
August 14, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
34 வருடங்களுக்கு பிறகு தொடரை வென்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி சாதனை! | west indies record odi seires victory after 34 years
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டிரினிடாட்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி தொடரை 2-1 என கைப்பற்றி சாதனை படைத்தது.

டிரினிடாட்டில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற 3-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 294 ரன்கள் குவித்தது. தனது 19-வது சதத்தை அடித்த கேப்டன் ஷாய் ஹோப் 94 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 10 பவுண்டரிகளுடன் 120 ரன்கள் விளாசினார்.

இறுதிக்கட்டத்தில் அவருக்கு உறு​துணை​யாக விளை​யாடிய ஜஸ்​டின் கிரீவ்ஸ் 24 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 4 பவுண்​டரி​களு​டன் 43 ரன்​கள் சேர்த்​தார். இந்த ஜோடி 7-வது விக்​கெட்​டுக்கு கடைசி 8 ஓவர்​களில் 110 ரன்​கள் விளாசி​யது. எவின் லீவிஸ் 37, ராஸ்​டன் சேஸ் 36 ரன்​கள் சேர்த்​தனர். பாகிஸ்​தான் அணி தரப்​பில் நசீம் ஷா, அப்​ரார் அகமது ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் வீழ்த்​தினர்.

295 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த பாகிஸ்​தான் அணி 29.3 ஓவர்​களில் 92 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக சல்​மான் ஆகா 30, முகமது நவாஸ் 23, ஹசன் நவாஸ் 13, பாபர் அஸம் 9, நசீம் ஷா 6 ரன்​கள் சேர்த்​தனர். சைம் அயூப், அப்​துல்லா ஷபிக், கேப்​டன் முகமது ரிஸ்​வான் ஹசன் அலி, அப்​ரார் அகமது ஆகியோர் ரன் ஏதும் எடுக்​காமல் நடையை கட்​டினர். மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி தரப்​பில் ஜெய்​டன் சீல்ஸ் 7.2 ஓவர்​களை வீசி 18 ரன்​களை மட்​டும் வழங்கி 6 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார்.

202 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை 2-1 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. முதல் போட்​டி​யில் பாகிஸ்​தான் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 2-வது போட்​டி​யில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் 5 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்​திருந்​தது.

பாகிஸ்​தானுக்கு எதி​ராக இருதரப்பு ஒரு​நாள் போட்டி தொடரை 34 வருடங்​களுக்கு பிறகு தற்​போது​தான் வென்​றுள்​ளது மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி. கடைசி​யாக அந்த அணி பாகிஸ்​தானுக்கு எதி​ரான ஒரு​நாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரை 1991-ம்​ ஆண்​டு வென்​றிருந்​தது.



Read More

Previous Post

பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி புகார் தெரிவித்த 5 வயது சிறுமி.. இணையத்தில் வைரலாகும் லெட்டர் | இந்தியா

Next Post

ரெப்போ விகிதம் குறையலையா? கவலைய விடுங்க… EMI-ஐ குறைக்க சில யோசனைகள்

Next Post
ரெப்போ விகிதம் குறையலையா? கவலைய விடுங்க… EMI-ஐ குறைக்க சில யோசனைகள்

ரெப்போ விகிதம் குறையலையா? கவலைய விடுங்க... EMI-ஐ குறைக்க சில யோசனைகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin