கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக
விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை வெளியிடப்படம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் டிசம்பர்
21ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை வெளியிடப்படும்.
நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பாகப் பதிவு
குறித்த அறிக்கை காணாமல் போயுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களை அமைச்சர்
முற்றிலும் பொய்யானவை என அவர் மறுத்துள்ளார்.

சபாநாயகரால் நியமிக்கப்பட்ட இந்தக்குழு, இதுவரை 16 சாட்சிகளிடம்
வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதாகவும் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும்
நாடாளுமன்றத்தில் பாதுகாப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும்
தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

