[ad_1]
Last Updated:
முன்னாள் கேப்டன் பாபர் ஆஸம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை.
பாகிஸ்தானைச் சேர்ந்த 31 வயதாகும் கிரிக்கெட் வீரர் உஸ்மான் சின்வாரி சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இளம் வயதில் அவர் ஓய்வை அறிவித்திருப்பது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் அந்த அணியை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும் என அந்நாட்டு அணியின் கிரிக்கெட் ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் வலியுறுத்தி வருகிறார்கள்.
அதன் அடிப்படையில் முக்கிய வீரர்களான முன்னாள் கேப்டன் பாபர் ஆஸம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பெறவில்லை. மேலும் சில புது முகங்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வாய்ப்புகளை வழங்கியுள்ளது. ஏற்கனவே பல தொடர்களில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்திருக்கும் நிலையில் ஆசிய கோப்பை தொடரிலாவது சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்கிற எதிர்பார்ப்பு அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் காணப்படுகிறது.
இந்த நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் கான் சின்வாரி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். 2013 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடந்த டி20 கிரிக்கெட் தொடரில் அவர் அறிமுகம் ஆனார். 17 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்களையும் 16 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார். டி20 கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான 4 ஆண்டுகளுக்கு பிறகு தான் அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரில் விளையாடும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
மேலும் தனது அணிக்காக ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே அவர் விளையாடி இருக்கிறார். ஒட்டுமொத்தமாக அவரது 12 ஆண்டுகள் கிரிக்கெட் கரியரில் மொத்தமே 34 சர்வதேச போட்டிகளில் உஸ்மான் கான் சின்வரி விளையாடி இருக்கிறார். இந்த நிலையில் அவர் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
September 09, 2025 6:42 PM IST