Last Updated:
ஊட்டியில் நேற்று வரை ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனையான ப்ரோக்கோலி தற்போது 250 முதல் 300 ரூபாய் வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நேற்று வரை ரூபாய் 50 முதல் 60 வரை விற்பனையான ப்ரோக்கோலி தற்போது 250 முதல் 300 ரூபாய் வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் முதுகெலும்பாக தேயிலை விவசாயம் திகழ்ந்து வருகிறது. இதற்கு அடுத்தபடியாக மலைத்தோட்ட காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், பீன்ஸ் மற்றும் சைனீஸ் காய்கறிகள் அதிகளவு பயிரிடப்படுகின்றன.
இங்கு விளைவிக்கக்கூடிய மலைத்தோட்ட காய்கறிகள் ஊட்டி மார்க்கெட் சந்தைக்கும், மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கும் எடுத்துச் சென்று வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி மார்க்கெட் சந்தையில் ப்ரோக்கோலி கடந்த வாரம் விலை 50 முதல் 60 வரை விற்பனையானதால் வேதனையில் இருந்த விவசாயிகள், தற்போது ஊட்டி மார்க்கெட் சந்தையில் 250 முதல் 300 வரை விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
ஊட்டி மார்க்கெட்டுக்கு வரும் சைனீஸ் காய்கறி வகைகள் அதிகளவில் பல்வேறு வெளிமாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி ஆவதால் இந்த காய்கறி பொருட்கள் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர் மழையின் காரணமாக சுமார் இரண்டு மூன்று நாட்களுக்கு இதே விலை நீடிக்கும் எனவும் எதிர்பார்ப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மலை காய்கறிகள் மட்டுமின்றி பல்வேறு ஆங்கில காய்கறிகளையும் பயிர் செய்வதில் நீலகிரி மாவட்ட விவசாயிகள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது என்றென்றும் விவசாயிகளுக்கு கை கொடுக்கும் பொருட்களாக உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். இதனால் இதன் டிமாண்டும் சந்தைகளில் அதிகமாகவே உள்ளது.
The Nilgiris,Tamil Nadu
June 15, 2025 3:27 PM IST

