• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

300 பேருடன் சென்ற சொகுசு கப்பல்… நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த அதிர்ச்சி…

GenevaTimes by GenevaTimes
July 20, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
300 பேருடன் சென்ற சொகுசு கப்பல்… நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த அதிர்ச்சி…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 20, 2025 8:55 PM IST

300 பேருடன் சென்ற சொகுசு கப்பல் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்து, அதில் பயணித்தவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள கடலில் குதித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

News18News18
News18

இந்தோனேசியாவின் கடற்கரையில் KM பார்சிலோனா VA சொகுசு கப்பலில் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருந்து தப்பிக்க அதில் பயணித்த பயணிகள், தங்கள் குழந்தைகளுடன் கடலில் குதித்தனர்.

இந்தோனேசியாவில் உள்ள மனோடோ – தஹுடா தீவுகளுக்கு இடையே KM பார்சிலோனா VA கப்பல் இயக்கப்பட்டுவருகிறது. இந்தக் கப்பலில் சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

இந்நிலையில், இன்று பிற்பகல் வேலையில் அந்தக் கப்பலில் திடீரென தீப்பற்றியது. இதனைக் கண்ட பயணிகள் அச்சத்தில் கத்தி கூச்சலிட்டனர். தீ வேகமாக கப்பலில் பரவியதைத் தொடர்ந்து பயணிகள் தங்கள் உயிரை காத்துகொள்வதற்காக கடலில் குதித்தனர்.

கடலில் குதித்தவர்கள் பெரும்பாலானோர், உயிர் காக்கும் ஜாக்கெட்களை அணிந்திருந்தனர். மேலும், குழந்தைகளுடன் வந்தவர்கள், தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு கடலில் குதித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும், உடனடியாக அந்தப் பகுதியில் இருந்த மீனவர்களும், மீட்பு குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களையும், கப்பலில் சிக்கியிருந்தவர்களையும் மீட்டனர்.

மேலும் கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர். நடுக்கடலில் கப்பல் முழுக்க தீயில் எரியும் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

தற்போதுவரை இந்த தீவிபத்தில், 3 பேர் பலியாகியிருப்பதாகவும் பலரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

300 பேருடன் சென்ற சொகுசு கப்பல் நடுக்கடலில் தீப்பற்றி எரிந்து, அதில் பயணித்தவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள கடலில் குதித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 20, 2025 8:24 PM IST

Read More

Previous Post

பிரதமர் மோடி நாளை நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறார்!

Next Post

Padang Besar பகுதியில் RM 3.17 லட்சம் மதிப்பிலான உறைந்த கோழிக்கால் பறிமுதல் | Makkal Osai

Next Post
Padang Besar பகுதியில் RM 3.17 லட்சம் மதிப்பிலான உறைந்த கோழிக்கால் பறிமுதல் | Makkal Osai

Padang Besar பகுதியில் RM 3.17 லட்சம் மதிப்பிலான உறைந்த கோழிக்கால் பறிமுதல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin