300 கார்கள், தனியார் இராணுவம், ஜெட் விமானங்கள் என மலேசிய நாட்டின் புதிய மன்னர் சுல்தான் இப்ராகிமின் சொத்து மதிப்புகள் பெரும் வியப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகில் செல்வ செழிப்பு மிக்க நாடுகளில் ஒன்றாக மலேசியா இருந்து வருகிறது. இங்கு ஜனநாயக முறை நடைமுறையில் இருந்தாலும், மன்னர் நடைமுறையும் வழக்கத்தில் இருக்கிறது.
மலேசிய மன்னர் அப்துல்லா கடந்த 2019 ஜனவரி 31ஆம் தேதி இருந்து நேற்று 2024 ஜனவரி 30 ஆம் தேதி வரை பொறுப்பில் இருந்தார். இந்நிலையில் மலேசியாவின் 17 வது மன்னராக, 65 வயதாகும் சுல்தான் இப்ராஹிம் இஸ்கந்தர் பொறுப்பேற்றுள்ளார். இவருக்கு மட்டும் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 60,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கும் மலேசிய மன்னர் சுல்தான் இப்ராஹிம் ரியல் எஸ்டேட், தொலைத் தொடர்பு, எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகங்களில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் ஜெர்மனி சர்வாதிகாரி ஹிட்லரால் பரிசளிக்கப்பட்ட கார் உள்பட 300க்கும் அதிகமான சொகுசு கார்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போயிங் 737 ரக ஜெட் விமானங்களையும், தனது குடும்பத்திற்கு தனியார் ராணுவத்தையும் சுல்தான் இப்ராஹிம் வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : உலக பணக்காரர் பட்டியல்… எலன் மஸ்க்கை ஓரம் தள்ளும் நபர்… யார் தெரியுமா?
அவரது சொத்து மதிப்பு ரூ. 60 ஆயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டாலும், அதைவிட பல மடங்கு இருக்கும் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது. மலேசியாவில் தொலைதொடர்பு சேவை வழங்கும் முன்னணி நிறுவனமான யு மொபைலில் மன்னர் சுல்தானுக்கு 24 சதவீத பங்குகள் உள்ளன. இதே போன்று பல்வேறு முன்னணி நிறுவனங்களில் சுல்தான் மற்றும் அவரது குடும்பத்தினர் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்து இருக்கிறார்கள்.
வெளிநாடுகளில் சிங்கப்பூரில் மட்டும் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் சுல்தான் குடும்பத்திற்கு உள்ளது. அதேநேரம், புதிய மலேசிய மன்னர் சுல்தான் தனது முன்னோர்களைப் போல் இல்லாமல் ஆடம்பர பிரியராக இருக்கிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அவர் அரசியல் ரீதியாக சீனா பக்கம் அதிகம் சாய்வதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…