• Login
Tuesday, August 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

30 பேரை கொன்னுட்டாங்க.. இந்திய உளவுத்துறையால் கதறும் பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு | Indian Intelligence agents killed over 30 terrorists in Pakistan, says Lashkar e Taiba Rizwan Hainf

GenevaTimes by GenevaTimes
August 4, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
30 பேரை கொன்னுட்டாங்க.. இந்திய உளவுத்துறையால் கதறும் பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு | Indian Intelligence agents killed over 30 terrorists in Pakistan, says Lashkar e Taiba Rizwan Hainf
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Published: Tuesday, August 4, 2026, 8:06 [IST]

இஸ்லாமாபாத்: ”இந்திய உளவுத்துறை ஏஜென்டுகள் பாகிஸ்தானில் நம் இயக்கத்தை சேர்ந்த 30க்கும் அதிகமானவர்களை கொன்னுட்டாங்க. அதேபோல் காஷ்மீரிலும் நம்மை அமைதியாகவும், நிம்மதியாகவும் இயங்க இந்திய உளவு அமைப்பினர் அனுமதிக்காமல் உள்ளனர். ஏஜென்ட்டுகள் மூலம் நம் இயக்கத்தவர்களை கொன்று குவித்து வருகின்றனர்” என்று பாகிஸ்தானை மையப்படுத்தி செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பு கதறிய வீடியோ வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானை மையப்படுத்தி பல்வேறு பயங்கரவாத அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். அதில் முக்கியமான ஒரு பயங்கரவாத அமைப்பு தான் லஷ்கர் இ தொய்பா. இந்த அமைப்பு கடந்த 1980 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சோவியத் – ஆப்கானிஸ்தான் போர் காலத்தில இந்த அமைப்பு உருவானது. ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் யூனியன் வெளியேறிய பிறகு இந்த அமைப்பு நம் நாட்டை குறிவைக்க தொடங்கியது.

Lashkar e Taiba pakistan india intelligence

நம் நாட்டில் பல்வேறு தாக்குதல்கள் மற்றும் சதி செயல்களில் இந்த அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்பு உள்ளது. இந்த அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ உளவுத்துறையாக உள்ள ஐஎஸ்ஐ-யின் ஆதரவு, நிதி உதவி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பை நம் நாடு மட்டுமின்றி அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் உள்பட பல நாடுகள் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தான் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ரிஸ்வான் ஹனிஃப் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசி புலம்பிய வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோ கடந்த மே மாதம் நடந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது வைரலாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வீடியோவில் ரிஸ்வான் ஹனிஃப் பேசியதாவது:

”கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் நம் இயக்கத்தை சேர்ந்த 30க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இந்திய உளவுத்து ஏஜென்ட்டுகளால் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பெஷாவர், கராச்சி, ராவல்பிண்டி, முசாபரபாத் மற்றும் ராவலகோட் உள்ளிட்ட நகரங்களில் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் காஷ்மீரிலும் நம்மை அமைதியாகவும், நிம்மதியாகவும் இயங்க இந்திய உளவு அமைப்பினர் அனுமதிக்காமல் உள்ளனர். ஏஜென்ட்டுகள் மூலம் நம் இயக்கத்தவர்களை கொன்று குவித்து வருகின்றனர்.

லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய நோக்கம் என்பது பிற மதத்தவர்களை கொல்வது தான். நம்மால் இறப்போர் செய்த ஒரே குற்றம் என்னவென்றால் அது அவர்களின் மத நம்பிக்கையாக தான் இருக்கும்” என்றான். இந்த சமயத்தில் பிற மதத்தினர் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை அவன் கூறியிருந்தான்.

பாகிஸ்தானில் சமீபகாலமாக லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு வருகின்றனர். இவர்களை இந்திய உளவுத்துறை தான் தீர்த்து கட்டி வருவதாக பாகிஸ்தான் அவ்வப்போது குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டை நம் நாடு முற்றிலுமாக மறுத்த வருகிறது. இந்நிலையில் தான் ரிஸ்வான் ஹனிஃப் இப்படி பேசி உள்ளான்.

English summary

A video has surfaced showing the Pakistan-based terrorist organization Lashkar-e-Taiba lamenting that Indian intelligence agents have killed more than 30 of its members. The group complains that Indian intelligence agencies are preventing them from operating peacefully and securely in Kashmir and are systematically eliminating their members through these agents.

Read More

Previous Post

இன்றும் சில பாடசாலைகளுக்கு விடுமுறை! வெளியானது முக்கிய அறிவிப்பு

Next Post

Gold Price Prediction | தங்கம் விலையில் திடீர் ட்விஸ்ட்.. நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. நிபுணர்கள் கூறுவதென்ன?

Next Post
Gold Price Prediction | தங்கம் விலையில் திடீர் ட்விஸ்ட்.. நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. நிபுணர்கள் கூறுவதென்ன?

Gold Price Prediction | தங்கம் விலையில் திடீர் ட்விஸ்ட்.. நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்.. நிபுணர்கள் கூறுவதென்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin