வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: லோக்சபா தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீசார் தேவை என தலைமை தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
பார்லிமென்ட் லோக்சபா தேர்தலை நடத்துவதற்கான பணிகளை தலைமை தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது. விரைவில் தேர்தல் தேதி குறித்த அட்டவணை வெளியாக உள்ளது
இந்நிலையில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து தலைமை தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது, இத்தேர்தலில் 97 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் 12.5 லட்சம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 3.40 லட்சம் மத்திய ஆயுதப்படை போலீசார் தேவை என தலைமை தேர்தல் ஆணையம் மத்திய அரசிடம் கேட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement