முதலமைச்சர் பதவியைப் பெற டி.கே. சிவகுமார் மும்முரம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


