• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

3-வது டி20-ல் இங்கிலாந்துடன் இன்று மோதல்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி | team india to play with england in third t20i match today

GenevaTimes by GenevaTimes
January 28, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
3-வது டி20-ல் இங்கிலாந்துடன் இன்று மோதல்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி | team india to play with england in third t20i match today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராஜ்கோட்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இரவு 7 மணிக்கு ராஜ்கோட்டில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-0 என தன்வசப்படுத்தும்.

ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், சென்னையில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி கண்டிருந்தது. இதனால் இந்திய அணி டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில் இரு அணிகளும் இன்று 3-வது ஆட்டத்தில் ராஜ்கோட்டில் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றும். இதனால் இந்திய அணி வீரர்கள் தீவிர முனைப்புடன் செயல்படக்கூடும். தொடக்க பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் கடந்த இரு ஆட்டங்களிலும் ஜோப்ரா ஆர்ச்சரின் ஷாட் பந்து வியூகத்தில் சிக்கி ஆட்டமிழந்தார். இதனால் அவர், கூடுதல் கவனத்துடன் மட்டையை சுழற்றக்கூடும்.

சென்னை போட்டியில் அற்புதமாக விளையாடி 55 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய திலக் வர்மாவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். சேப்பாக்கம் மைதானத்தில் ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட் ஆகியோருக்கு எதிராக திலக் வர்மா சிறப்பாக செயல்பட்டு ரன்கள் குவித்திருந்தார். இதனால் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை திலக் வர்மா சவால் அளிக்கக்கூடும்.

அதேவேளையில் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்தத் தொடரில் இதுவரை பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. முதல் போட்டியில் ரன் கணக்கை தொடங்கும் முன் ஆட்டமிழந்த அவர், சென்னை போட்டியில் 12 ரன்களில் போல்டாகியிருந்தார். இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் சூர்யகுமார் யாதவ் மட்டை வீச்சில் ஏதேனும் மாயாஜாலங்கள் நிகழ்த்த முயற்சிக்கக்கூடும்.

ரிங்கு சிங், நித்திஷ் குமார் ரெட்டி ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை என்பதால் இன்றைய ஆட்டத்தில் ஷிவம் துபே அல்லது ரமன் தீப் சிங் சேர்க்கப்படக்கூடும். இது நிகழ்ந்தால் வாஷிங்டன் சுந்தர் நீக்கப்படக்கூடும். மற்றபடி அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. வேகப்பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், கடந்த இரு ஆட்டங்களிலும் தொடக்கத்திலேயே விக்கெட் வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்தார். மீண்டும் ஒரு முறை அவர், தொடக்க பேட்ஸ்மேன்களுக்கு சவால் தரக்கூடும். சுழலில் வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அக்சர் படேல் ஆகியோரும் நெருக்கடி கொடுக்க ஆயத்தமாக உள்ளனர்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரையில் இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும். இதனால் அந்த அணி வெற்றி பெற்று தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்திருக்க முயற்சிக்கக்கூடும். பேட்டிங்கில் ஜாஸ் பட்லர் மட்டுமே சீராக ரன்கள் சேர்த்து வருகிறார். மற்ற பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சில் தடுமாறுவது தொடர் கதையாக உள்ளது.

சென்னை போட்டியில் ஜேமி ஸ்மித், பிரைடன் கார்ஸ் ஆகியோர் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டனர். இதனால் அவர்களிடம் இருந்து சிறந்த மட்டை வீச்சு வெளிப்பட வாய்ப்பு உள்ளது. பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜோப்ரா ஆர்ச்சர் தொடக்கத்தில் விக்கெட் கைப்பற்றினாலும் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது பலவீனமாக உள்ளது. சென்னை போட்டியில் அவர், 4 ஓவர்களை வீசி 60 ரன்களை தாரை வார்த்திருந்தார்.

மாற்றமில்லாத இங்கி. அணி: ராஜ்கோட்டில் இன்று நடைபெற 3-வது டி20 போட்டிக்கான விளையாடும் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்றே அறிவித்தது. இதில் சென்னையில் நடைபெற்ற 2-வது போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இடம் பெற்றுள்ளனர். எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

அணி விவரம்: ஜாஸ் பட்லர் (கேப்டன்), பென் டக்கெட், பில் சால்ட், ஹாரி புரூக், லியாம் லிவிங்ஸ்டன், ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், ஆதில் ரஷீத், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட்.



Read More

Previous Post

தில்லி தோ்தல்: முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி வாக்குப்பதிவு!

Next Post

தொலைபேசியில் வாழ்த்திய மோடியுடன் ட்ரம்ப் ஆலோசனை | pm narendra modi holds talks with president donald Trump

Next Post
தொலைபேசியில் வாழ்த்திய மோடியுடன் ட்ரம்ப் ஆலோசனை | pm narendra modi holds talks with president donald Trump

தொலைபேசியில் வாழ்த்திய மோடியுடன் ட்ரம்ப் ஆலோசனை | pm narendra modi holds talks with president donald Trump

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin