ஆயர் ராஜா விரைவுச்சாலையில் (AYE) கார், மூன்று லாரிகள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்து ஏற்பட்டது.
இதில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் சிறிது நேரம் காருக்குள் சிக்கிக் கொண்டார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
நேற்று (28 ஆம் தேதி) இரவு 8:45 மணியளவில், துவாஸ் நோக்கிச் செல்லும் ஆயர் ராஜா விரைவுச்சாலையில் விபத்து ஏற்பட்டது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததாக குடிமை தற்காப்பு படை (SCDF) சேனல் 8 நியூஸ் தளத்திடம் தெரிவித்துள்ளது.
இதில் லாரி ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்டதாகவும், அவருக்கு உதவ ஹைட்ராலிக் மீட்பு கருவி பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
மொத்தம் மூன்று பேர் சிகிச்சைக்காக வேண்டி தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதாவது, 38 வயது லாரி ஓட்டுநர் மற்றும் 37 மற்றும் 38 வயதுடைய இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் சுயநினைவுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
போலீஸ் விசாரணைகள் நடந்து வருகிறது.