Last Updated:
பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் சைப்ரஸ், கனடா, குரோஷியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். சைப்ரஸில் வர்த்தகத் தலைவர்களை சந்தித்து, கனடாவில் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
கனடா, சைப்ரஸ், குரோஷியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி 5 நாட்கள் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
சைப்ரஸ் நாட்டின் குடியரசுத் தலைவர் நிகோஸ் கிறிஸ்தோடோலைட்ஸ் அழைப்பின் பேரில், ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டிற்கு பிரதமர் மோடி செல்கிறார். 2 சதாப்தங்களை கடந்து, சைப்ரஸ் நாட்டிற்குச் செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆகிறார். அப்போது, லிமாஸ்ஸொலில் வர்த்தகத் தலைவர்களையும் சந்திக்கும் பிரதமர் மோடி, திங்கட்கிழமை கனடாவிற்குச் செல்கிறார்.
அங்கு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் (Justin Trudeau) பிரதமர் மோடி கனனாஸ்கிஸில் (Kananaskis) நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
இறுதியாக வரும் 18 ஆம் தேதி குரோஷியா நாட்டிற்குச் செல்லும் பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச் (Andrej Plenković) மற்றும் குடியரசுத் தலைவர் ஜோரன் மிலானோவிச் ஆகியோரைச் சந்திக்கிறார்.
இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Delhi Cantonment,New Delhi,Delhi
June 14, 2025 6:34 PM IST
பிரதமர் மோடி நாளை முதல் 5 நாட்கள் வெளிநாடு பயணம்: ஜி-7 உச்சி மாநாட்டிலும் பங்கேற்கிறார்!


