சாங்கி நோக்கிச் செல்லும் வழியில் ECP-யில் மூன்று டிப்பர் லாரிகளும் ஒரு டேங்கர் லாரியும் தொடர் வரிசையாக மோதிக் கொண்டன.
இந்த சம்பவம் தொடர்பான காணொளிகள் Singapore roads accident.com என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியாகி இணையத்தில் பரவியது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.15) நடந்த இந்த சம்பவம் தொடர்பான புகார்களை பிற்பகல் 2.30 மணிக்கு சிங்கப்பூர் காவல் படையும் (SPF), சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் (SCDF) பெற்றன.

அதில் ஒரு ஓட்டுநர் அவரது இருக்கையில் சிக்கிக் கொண்டதாகவும், பின்னர் ஹைட்ராலிக் மீட்பு கருவியைப் பயன்படுத்தி அவரை வெளியே எடுத்ததாகவும் SCDF சொன்னது.
48 மற்றும் 46 வயதுமிக்க இரு டிப்பர் லாரி ஓட்டுநர்கள் சுயநினைவுடன் சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இன்னொருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாகவும், ஆனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசாரணைகள் நடந்து வருகின்றன.
சிங்கப்பூரில் இருந்து நாட்டை விட்டு வெளியேற இருந்த இந்திய ஆடவரை வளைத்து பிடித்த போலீஸ்
Photos: Singapore roads accident.com 新加坡公路意外网页 / Facebook.

