Last Updated:
மூன்றாவது குழந்தை பெறும் பெண்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்குவதாகவும், ஆண் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகையுடன் கூடுதலாக பசு மாடு ஒன்றை வழங்குவதாகவும் ஆந்திர எம்.பி. தெரிவித்துள்ளார்.
ஆந்திராவில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திர எம்.பி. சமீபத்தில் டெல்லியில் பேசியபோது, தென் மாநிலங்களில் மக்கள் தொகை குறைந்து வருகிறது. வயதானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பீகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் இளைஞர்கள் அதிகமாக உள்ளனர். இதுவரை குடும்ப கட்டுப்பாட்டுக்கு ஆதரவாக இருந்த தான், தனது மன நிலையை மாற்றிக் கொள்வதாக தெரிவித்தார்.
இந்நிலையில், பிரகாசம் மாவட்டத்தில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் பெண்களுக்கு இரண்டு குழந்தைகள் வரை மட்டுமே இதுவரை மகப்பேறு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இனிமேல் எத்தனை குழந்தைகள் பெற்றாலும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என்றார்.
Also Read: தெலங்கானா சுரங்க விபத்து.. 2 வாரத்திற்கு பிறகு ஒருவரின் சடலம் மீட்பு – எஞ்சிய 7 பேரின் நிலை என்ன?
இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சியின் விஜயநகரம் தொகுதி லோக் சபா எம்.பி.யான அப்பலா நாயுடு கூறுகையில், மூன்றாவது குழந்தை பெறும் பெண்களுக்கு என் ஊதியத்தில் இருந்து ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்குவேன். ஆண் குழந்தை பெற்றால் ஊக்கத்தொகையுடன் கூடுதலாக பசு மாடு ஒன்றையும் வழங்குவதாக தெரிவித்துள்ளார். இதை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவும் பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
March 10, 2025 12:33 PM IST