இசைத் துறையில் வழங்கப்படும் உயரிய விருதான கிராமி விருதுகள் பெற்ற கையோடு இசைக் கலைஞர் கில்லர் மைக் போலீசார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
66 ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல் மாகாணத்தில் உள்ள கிப்டோ டாட் காம் சதுக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உலகம் முழுவதும் இருந்தும் இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். இதில் இந்தியாவின் சக்தி ஆல்பத்திற்கு கிராமி விருது கிடைத்துள்ளது.
சங்கர் மகாதேவன், செல்வகணேஷ், கணேஷ் ராஜகோபாலன், ஜாகிர் உசேன் ஆகியோர் இணைந்து சக்தி என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். இதில் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று பிரபல இசைக் கலைஞரான கில்லர் மைக்கிற்கு 3 கிராமி விருதுகள் வழங்கப்பட்டன.
அட்லாண்டாவை சேர்ந்த அவர் சிறந்த பர்பார்மென்ஸ், சிறந்த ஆல்பம் மற்றும் சிறந்த பாடலுக்காக விருதை பெற்றார்.
இதையும் படிங்க – பறக்கும் விமானத்தில் ஆணுறை, உள்ளாடையா? ஷாக் தகவல் பகிர்ந்த பணிப்பெண்!!
இதன்பின்னர் அவர் அங்கிருந்த சிலரிடம் தகாத முறையில் நடந்து கொண்டு வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக போலீசாரால் கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
Killer Mike is taken away in handcuffs at https://t.co/9ImDm1bpFW Arena after winning 3 #Grammys pic.twitter.com/1IUBU0IQb6
— The Hollywood Reporter (@THR) February 5, 2024
Rapper Killer Mike has been taken away in handcuffs after winning best rap song over barbie world. #GRAMMYs pic.twitter.com/DOVHK4bZeP
— welp. (@YSLONIKA) February 5, 2024
கைதான சில மணி நேரத்திற்கு பின்னர் கில்லர் மைக் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இசை துறையில் உயரிய விருதான கிராமி விருதுகள் 3 யை வென்ற இசை கலைஞர் கைது செய்யப்பட்டிருப்பது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…