கோடக் மஹிந்திரா வங்கி 3 ஆண்டுகள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD திட்டத்திற்கு 6.4% என்ற சற்றே குறைந்த வட்டி விகிதத்தை வழங்குகிறது. அதே சமயம், மூத்த குடிமக்களுக்கு இந்த வங்கி 6.9% வட்டி பெறுகின்றனர். இந்த வித்தியாசம் சிறியதாகத் தோன்றினாலும், பெரிய தொகையை முதலீடு செய்வோருக்கு கிடைக்கும் வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்த கூடும். தனியார் வங்கிகளில், ஃபெடரல் வங்கி தனித்து நிற்கிறது. ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வட்டி விகிதங்களின்படி, இந்த வங்கி 3 ஆண்டு முதிர்வு காலம் கொண்ட FD-க்கு 6.75% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.25% வட்டியும் வழங்குகிறது.


