Last Updated:
இந்தியாவில் 10 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட சேனல்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் இந்திய யூடியூபர்களுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் வரை வழங்கப்பட்டுள்ளதாக யூடியூப் நிறுவன சிஇஓ நீல் மோகன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய நீல் மோகன், இந்தியா கிரியேட்டர்களின் நாடாக மாறி உள்ளது என தெரிவித்தார். எனவே அவர்களை ஊக்கவிப்பதற்கு யூடியூப் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த ஆண்டு மட்டும் இந்திய கிரியேட்டர்களின் வீடியோக்களை 4 ஆயிரத்து 500கோடி மணி நேரத்திற்கு மற்ற நாட்டினர் பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் 10 லட்சம் பேர் சப்ஸ்கிரைப் செய்யப்பட்ட சேனல்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரமாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அடுத்த 2 ஆண்டுகளக்கு இந்திய கிரியேட்டர்கள், ஊடக நிறுவனங்கள், கலைஞர்களை ஊக்கவிப்பதற்காக 850 கோடி ரூபாயை யூடியூப் நிறுவனம் முதலீடு செய்ய இருப்பதாகவும் நீல் மோகன் அறிவித்தார். இந்திய கிரியேட்டர்களின் வீடியோக்கள் மூலம் இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம் உள்ளிட்டவை சர்வதேச அளவில் கவனம் பெறுவதாகவும் அவர் கூறினார்.
உலகிலேயே அதிகம் பேர் யூடியூப்பில் பின் தொடரும் தலைவராக பிரதமர் மோடி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் யூடியூப் பக்கத்தை 2 கோடியே 50 ஆயிரம் பேர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.
Mumbai,Maharashtra
May 03, 2025 10:12 AM IST


