மும்பையில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் 3 ஆண்டுகளாக பூட்டிய அறையில் வாழ்ந்துள்ளார். முற்றிலும் வெளி உலகத் தொடர்பே இல்லாமல் ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவை வாங்குவதற்காக மட்டுமே கதவைத் திறந்து வெளியே வந்துள்ளார்.
வீட்டில் உள்ள குப்பைகளைக் கொட்ட வெளியே வருவது கூட அபூர்வம் என்றும், அண்டை வீட்டினர் வற்புறுத்திய பிறகே குப்பைகளைக் கூட வெளியே கொட்டுவார் எனவும் அண்டை வீட்டினர் குறிப்பிடுகின்றனர்.
நவி மும்பையின் கார்குல் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 55 வயதுடைய தொழில்நுட்பத் துறை ஊழியர் ஒருவர் பூட்டிய வீட்டிலேயே இருந்துள்ளார்.
அனுப் குமார் நாயர் என்ற பெயருடைய இவர், தன்னார்வலர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில், அன்பின் சுவிஷேச சங்க ஆசிரமத்தின் உதவியுடன் பூட்டிய அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
3 ஆண்டுகளாக முடி வெட்டாமல், சவரம் செய்யாமல் உடல் நிலையும் மோசமாகி மீட்கப்பட்டுள்ளார். அவரின் கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை மீட்ட ஆசிரமம் தெரிவித்துள்ளது.

