Last Updated:
ஆந்திராவில் மக்கள் தொகை குறைவால் 2ஆவது குழந்தைக்கு 25 ஆயிரம், 3ஆவது குழந்தைக்கு 30 ஆயிரம், 4ஆவது குழந்தைக்கு 40 ஆயிரம் நிதியுதவி அளிக்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
ஆந்திராவில் ஒரு குடும்பத்தில் 3ஆவது குழந்தை பெற்றுக்கொண்டால் 30 ஆயிரம் ரூபாயும், 4ஆவது குழந்தைக்கு 40 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்க ஆலோசித்து வருவதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாகுளம் மாவட்டம் நர்சன்னபேட்டா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். அப்போது, பேசிய அவர், மாநிலத்தில் வருமானம் அதிகரித்தாலும், மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருவதாக வேதனையை வெளிப்படுத்தினார்.
ஒரு காலத்தில் மக்கள் தொகை கட்டுப்பாடு நடவடிக்கையை ஆதரித்தபோதிலும், தற்போது பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய சந்திரபாபு நாயுடு, 3ஆவது மற்றும் 4ஆவது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு நிதியுதவி வழங்க முடிவெடுத்துள்ளதாகக் கூறினார்.


