• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

29 ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி.. தலையிட்ட MOM – முதலாளிகளுக்கு நினைவூட்டல்

GenevaTimes by GenevaTimes
July 13, 2025
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
29 ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி.. தலையிட்ட MOM – முதலாளிகளுக்கு நினைவூட்டல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


SINGAPORE: ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக வழங்காத நிறுவனம் ஒன்று அதன் சில கடைகளை மூடியதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது 29 ஊழியர்களின் செலுத்தப்படாத சம்பள பாக்கி தொடர்பாக அவர்களுக்கு உதவி வருவதாக மனிதவள அமைச்சகம் (MOM) மற்றும் TADM ஆகியவற்றின் செய்தித் தொடர்பாளர்கள் கூட்டாக தெரிவித்தனர்.

S$5,000 மதிப்புள்ள தங்க கைச்செயின் காணவில்லை.. “இறந்த அம்மாவின் நினைவு பரிசு” – கண்டுபிடித்து தர வேண்டுகோள்

சோயா பால் விற்பனை நிலையமான Jollibean, கடந்த ஒரு வருடமாக அதன் சில கடைகளை மூடியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பல மாதங்களாக சம்பளம் பாக்கி

இதனை தொடர்ந்து, அங்கு வேலை பார்த்த ஊழியர் பலருக்கு பல மாதங்களாக சம்பளம் பாக்கி இருப்பதாகவும், அதே போல செலுத்தப்படவேண்டிய மைய வைப்பு நிதி (CPF) தொகையும் நிலுவையில் இருப்பதாகவும் CNA தெரிவித்துள்ளது.

தற்போது, அந்நிறுவனத்திற்கு புதிய உரிமையாளர் மாற்றம் அடைந்துள்ளதாக நிறுவனத்தின் இயக்குனர் ஷாருல் நஸ்ரின் முகமது தஹ்லான் விளக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், மாத இறுதிக்குள் ஊழியர்கள் சம்பளம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த பெட்ரோல் நிலைய ஊழியர் மரணம்

முன்னறிவிப்பு இல்லாமல் கடைகள் மூடல்

பல ஊழியர்கள் வழக்கம் போல வேலைக்கு வந்ததாக செய்தியாளர்களிடம் கூறினர், ஆனால் கடைகள் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மூடப்பட்டிருப்பதை அவர்கள் கண்டனர்.

அதில் ஒரு ஊழியர், வழக்கமாக வேலைக்கு வந்தபோது, பொருட்களை பேக் செய்து கிளம்ப சொன்னதாகக் கூறினார்.

அந்நிறுவனம் இன்னும் அவருக்கு சம்பள பாக்கியாக S$1,000 க்கும் அதிகமாகவும், மூன்று மாத CPF தொகையையும் செலுத்த வேண்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிறுமியின் வாழ்க்கையில் விளையாடிய வெளிநாட்டு ஊழியருக்கு 16 மாதச் சிறை

ஊழியர்களுக்கு கைகொடுக்கும் MOM

இந்நிலையில், 29 ஊழியர்களின் சம்பளக் பாக்கி தொடர்பாக அவர்களுக்கு உதவி வருவதாக MOM உறுதிப்படுத்தியுள்ளது.

இதில் 22 ஊழியர்களுக்கு தவணை முறையில் சம்பள பணத்தை செலுத்துவதற்கான ஒப்பந்தங்களில் முதலாளி கையெழுத்திட்டதாகவும், மேலும் மூன்று ஊழியர்களுக்கு பணம் செலுத்த உத்தர பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நான்கு ஊழியர்களின் முடிவுகள் நிலுவையில் உள்ளன.

MOM விசாரணை

கூடுதலாக, வேலைவாய்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்கள் நடந்துள்ளதா என்ற கோணத்தில் MOM அந்நிறுவனத்தை விசாரித்து வருகிறது.

“தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் CPF தொகைகளை சரியான காலநேரத்தில் செலுத்துமாறு முதலாளிகளுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்” என்று MOM செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

ஜாலான் பெசார் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிரடி சோதனை: 932 பேர் கைது

The post 29 ஊழியர்களுக்கு சம்பளம் பாக்கி.. தலையிட்ட MOM – முதலாளிகளுக்கு நினைவூட்டல் appeared first on Tamil Daily Singapore.

Read More

Previous Post

இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேப்பிங்கை உடனடியாகத் தடை செய்யுங்கள்: CAP சுகாதார அமைச்சகத்திடம் கோரிக்கை | Makkal Osai

Next Post

டுபாயில் நலமுடன் உள்ள இஷாரா! கெஹல்பத்ர பத்மே அதிர்ச்சி தகவல்

Next Post
டுபாயில் நலமுடன் உள்ள இஷாரா! கெஹல்பத்ர பத்மே அதிர்ச்சி தகவல்

டுபாயில் நலமுடன் உள்ள இஷாரா! கெஹல்பத்ர பத்மே அதிர்ச்சி தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin