• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

28 ஆண்டு கால வரலாற்றுச் சாதனை.. ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று மீராபாய் சானு அசத்தல்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
28 ஆண்டு கால வரலாற்றுச் சாதனை.. ஆசிய விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்று மீராபாய் சானு அசத்தல்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 23, 2026 4:46 PM IST

மீராபாய் சானுவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

மீராபாய் சானு
மீராபாய் சானு

ஜப்பானின் நகோயா நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் நட்சத்திர பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார். மகளிர் 49 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்னாட்ச் மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் ஆகிய பிரிவுகளில் ஒட்டுமொதாக 198 கிலோ எடையைத் தூக்கி 2-வது இடத்தைப் பிடித்து இச்சாதனையைப் படைத்துள்ளார்.

இப்போட்டியில், வடகொரியாவின் ரி சோங் கம் மொத்தம் 215 கிலோ எடையைத் தூக்கி முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இந்தோனேசியாவின் லுலுக் டயானா டிரி விஜயனா 191 கிலோ எடையைத் தூக்கி 3-வது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். வடகொரிய வீராங்கனையின் கடுமையான சவாலுக்கு மத்தியிலும், மீராபாய் சானு தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.

ஏற்கனவே 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று தேசத்தை பெருமைப்படுத்திய மீராபாய் சானுவுக்கு, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கிடைக்கும் முதல் பதக்கம் இதுவாகும். கடந்த 2023-ஆம் ஆண்டு சீனாவில் உள்ள ஹங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் போது, எதிர்பாராதவிதமாக காயம் அடைந்ததால் அவரால் பதக்கம் வெல்ல முடியாமல் 4-வது இடத்தைப் பிடித்து வாய்ப்பை இழந்தார்.

அந்த ஏமாற்றத்தையும் காயத்தையும் கடந்து, கடும் பயிற்சிகளுக்குப் பின் மீண்டும் வீறுநடை போட்டு வந்து தற்போது வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது அவரது அசைக்க முடியாத தன்னம்பிக்கையைக் காட்டுகிறது.

இந்திய பளுதூக்குதல் வரலாற்றில் இந்தப் பதக்கம் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக, கடந்த 1998-ஆம் ஆண்டு தாய்லாந்தின் பாங்காக் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியாவின் புகழ்பெற்ற பளுதூக்கும் வீராங்கனை கர்ணம் மல்லேஸ்வரி பதக்கம் வென்றிருந்தார். அதன்பிறகு நீண்ட 28 ஆண்டுகள் கழித்து, ஆசிய விளையாட்டுப் போட்டியின் பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவிற்குப் பதக்கம் பெற்றுத் தந்த இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை மீராபாய் சானு பெற்றுள்ளார்.

மீராபாய் சானுவின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்கு நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “மீராபாய் சானுவின் இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது; அவரது தளராத உறுதியும், விடாமுயற்சியும் ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கும் தொடர்ந்து பெருமளவிலான ஊக்கத்தை அளித்து வருகிறது” எனப் பிரதமர் பாராட்டியுள்ளார். விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும், அதிகாரிகளும் மீராபாய் சானுவுக்குத் தங்களது வாழ்த்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

Read More

Previous Post

இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தடுக்க ஒப்பந்தங்களில் ஏற்பாடுகளுண்டா?

Next Post

வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. 3 நாட்களுக்கு வங்கி சேவைகள் ரத்து! எந்தெந்த சேவைகள் கிடைக்கும்? | Bank Strike: Banks going to be closed for 3 Days From September 28 to 30?

Next Post
வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. 3 நாட்களுக்கு வங்கி சேவைகள் ரத்து! எந்தெந்த சேவைகள் கிடைக்கும்? | Bank Strike: Banks going to be closed for 3 Days From September 28 to 30?

வங்கி ஊழியர்கள் ஸ்ட்ரைக்.. 3 நாட்களுக்கு வங்கி சேவைகள் ரத்து! எந்தெந்த சேவைகள் கிடைக்கும்? | Bank Strike: Banks going to be closed for 3 Days From September 28 to 30?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin