Last Updated:
ஆந்திரா மாரேடுமில்லி பகுதியில் துப்பாக்கிச் சண்டையில் மத்வி ஹிட்மா மற்றும் 6 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்.
ஆந்திராவில் காவல்துறைக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், முக்கிய நக்சலைட் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா எல்லையோரம் கடந்த சில வாரங்களாக நக்சைலட்டுகள் நடமாட்டம் உள்ளதாக வந்த தகவலையடுத்து, ஆந்திர காவல்துறையின் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, மாரேடுமில்லி மண்டல் பகுதியில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.
இதில், நக்சலைட் தலைவர் மத்வி ஹிட்மா, அவரது மனைவி உள்பட 6 நக்சலைட்டுகள் என்கவுன்டர் செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு AK 47, ஒரு ரிவால்வர், ஒரு பிஸ்டல் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சுட்டுக்கொல்லப்பட்ட நக்சலைட் தலைவர் மத்வி ஹிட்மா, 2010 ஆம் ஆண்டு தண்டேவாடாவில் 76 CRPF வீரர்கள் கொல்லப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர்கள் உள்பட 27 பேர் கொல்லப்பட்ட 2013 ஜிராம் காடி படுகொலை, சிறப்பு படை வீரர்கள் 22 பேரை பலி கொண்ட 2021 சுக்மா-பிஜாப்பூர் தாக்குதல் உள்பட 26 தாக்குதல்களை ஹிட்மா முன்னின்று நடத்தியதாக சொல்லப்படுகிறது. ஹிட்மா குறித்த தகவல் தருவோருக்கு ஒரு கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
November 18, 2025 2:12 PM IST


