• Login
Saturday, August 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

26 கிலோ போதை பொருள் கடத்திய விமானி – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
August 15, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இராகவன் கருப்பையா –  நம் நாட்டில் குற்றச் செயல்கள் விசாரிக்கப்படும் போது பல வேளைகளில் ‘தும்பை விட்டு வாலை பிடிக்கும் நிலை’ இன்னமும் ஒரு தொடர்கதையாகத்தான் உள்ளது.

மலேசிய விமானி ஒருவர் சுமார் 26 கிலோகிராம் எடை கொண்ட போதைப் பொருளுடன் ஜாகர்த்தா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் பல கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.

26 கிலோ என்பது ஒரு மூட்டை அளவு என்று கொள்ளலாம். இந்தக் கடத்தல், சொல்லும் பாடம், நமது அமுலாக்க பிரிவும் சுங்கை துறையும் அதன் அமுலாகக்த்தில் சோரம் போய் கிடப்பதை  காட்டுவதாக அமைநுள்ளது.

அச்சம்வம் நிகழ்ந்து 2 வாரங்கள் கடந்துவிட்ட நிலையில் அதன் தொடர்பான சில மர்மங்களுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 26 கிலோகிராம் எடையுடைய போதைப் பொருள் எப்படி சுங்கத்துறை சோதனையைத் தாண்டிச் சென்றது?

அந்த சமையத்தில் அங்கு பணியில் இருந்த அதிகாரி யார்? எப்படிப்பட்ட சோதனையை அவர் மேற்கொண்டார்?

இத்தகைய கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்காத பட்சத்தில், அங்கிருந்த மறைக்காணிகளின் பதிவுகள்  பொது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும் என தலைநகர், கெப்போங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் கோரிக்கை விடுத்தார்.

ஆனால் விமான நிலையத் தரப்பினரோ, சுங்கத்துறை இலாகாவோ, விசாரணை மேற்கொள்ளும் காவல் துறையினரோ இதுநாள் வரையில் அதுபற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்பது விசித்திரம்தான்.

அந்த மறைக்காணிகளின் பதிவுகள் தணிக்கை செய்யப்படாமல் முழுமையாக வெளியிடப்பட்டால்தான் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் மீது பொது மக்களுக்கு நிம்பிக்கை ஏற்படும் என அவர் வலியுறுத்தினார்.

சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைகளைக் கடந்து 26 கிலோகிராம் எடையுடடைய ஒரு சட்ட விரோதப் பொருள் நகர்த்தப்படுகிறது என்றால் மற்ற அபாயகரமான பொருள்களும் கூட இதே போல கடத்தப்படும் சாத்தியம் உள்ளது அல்லவா!

எனினும் லிம் லிப் எங்ஙின் கோரிக்கைக்கு யாருமே செவிசாய்க்கவில்லை என்றே தெரிகிறது. அதன் தொடர்பாக எத்தரப்பிலிருந்தும் அறிக்கை எதனையும் காணவில்லை.

மாறாக, நமது காவல்துறையைச் சேர்ந்த ஒரு குழு, ஜாகர்த்தா சென்று அந்த விமானியை விசாரணை செய்த விவகாரம் குறித்துதான் அறிக்கை வெளியிடப்பட்டது.

தலைநகரில் யாரிடமிரிடமிருந்து எங்கே, எப்போது அந்த விமானி போதைப் பொருளை பெற்றுக் கொண்டார் எனும் விவரங்களையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அச்சமயத்தில் பணியில் இருந்த அதிகாரிகள் இந்தக் கடத்தலுக்கு உடந்தையாக இருந்திருந்தாலும் கவனக் குறைவாக செயல்பட்டிருந்தாலும் அவர்கள் முறையாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

எனவே இவ்விவகாரத்தில் துளியளவும் மெத்தனப் போக்கு இருக்கக் கூடாது. விமான நிலையத்தில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட வேண்டும் என பேரரசர் கூட கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஆக, இந்த கடத்தல் சம்பவ விசாரணையில் ‘தும்பை விட்டு வலைப் பிடிக்கும் நிலை’ இல்லாமல் நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப மறைக்காணிகளின் பதிவுகள் பொது மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டியது அவசியமாகும்.



Read More

Previous Post

பரபரப்பாக டாலரில் கடன் வாங்கும் இந்திய வங்கிகள்! 1 கோடி, 2 கோடி இல்லை.. ரூ.13,000 கோடி! என்ன பண்ணப் போறாங்க? | ICICI Bank Enters Dollar Loan Race as Indian Companies Seek More Foreign Currency Credit

Next Post

அதிக வெப்பத்தால் மனநலப் பாதிப்புகளும் அதிகரிக்கும்: மனநல நிபுணர் எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

Next Post
அதிக வெப்பத்தால் மனநலப் பாதிப்புகளும் அதிகரிக்கும்: மனநல நிபுணர் எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

அதிக வெப்பத்தால் மனநலப் பாதிப்புகளும் அதிகரிக்கும்: மனநல நிபுணர் எச்சரிக்கை! - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin