Last Updated:
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.30 மணியளவில் இருந்து போட்டிகள் இந்தியாவுக்கு ஆரம்பமாகின்றன.
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த 9 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
26 ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை தென்கொரியாவின் குமி நகரில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்றும் இந்திய வீரர்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர்.
அதிர்ச்சி தரும் விஷயமாக 2 முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4.30 மணியளவில் இருந்து போட்டிகள் இந்தியாவுக்கு ஆரம்பமாகின்றன. 20 கி.மீ. ரேஸ் வாக் ஆடவர் இறுதிப் போட்டி, அதைத் தொடர்ந்து உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெறும்.
இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த 9 வீரர்கள் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் பிரவீன் சித்ரவேல், 20 கிலோமீட்டர் நடை போட்டியில் செர்வின், 4•100 ரிலே போட்டியில் தமிழரசு, ராகுல் குமார் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
இந்த ரிலே போட்டியுடன் சேர்த்து கலப்பு ரிலே போட்டியில் விஷால், சந்தோஷ் குமார் ஆகியோர் களம் காண்கின்றனர். 400 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் பிரிவில் வித்யா ராம் ராஜ் பங்கேற்கிறார்.
4•100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அபிநயாவும், 4*400 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் கலப்பு தொடர் ஓட்டத்தில் சுபாவும் கலந்து கொள்கிறார்கள்.
May 26, 2025 11:54 PM IST


