கோலாலம்பூர்:
SME எனப்படும் சிறு, நடுத்தர, குறு நிறுவனங்களுக்கான டிஜிட்டல் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் நேற்றுக் கோலாலம்பூரில் நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 250க்கும் அதிகமான SME நிறுவனங்கள் இதில் பங்குபெற்று பயன்பெற்றன.


மலேசியத் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத்துறை அமைச்சின் கீழ் செயல்படும் ஓர் ஏஜென்சியான எஸ்எம்இ கார்ப் மலேசியா (SME Corp. Malaysia) ஏற்பாடு செய்தது.
தொழில்நுட்பத்தைப் பெருக்க, அளவை அதிகரி! ஏஐ, டிஜிட்டல் மாற்றம், ஸ்மார்ட் தீர்வுகளின் மூலம் உங்கள் எஸ்எம்இ பயணத்தை உயர்த்துங்கள் என்ற கருப்பொருளில் இந்தப் பயிலரங்கம் நடத்தப்பட்டது.
இப்பயிலரங்கை ஏற்பாடு செய்வதற்கான முக்கிய உத்தியாகத் தொழில்நுட்பம், டிஜிட்டல் நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதே அடிப்படை நோக்கமாகும். டிஜிட்டல் மயமாக்கல் நிலை, செயல்பாட்டுத் திறன், நிலையான வாணிக வளர்ச்சியை அதிகரிப்பதற்குரிய ஒரு முக்கியப் பயிலரங்காக இது அமைந்தது.


மலேசிய டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (MDEC), மலேசிய உற்பத்திச் சம்மேளனம் (FMM), மலேசிய சிறு, நடுத்தர, குறு தொழில்முனைவோர் சங்கம் (SAMENTA) ஆகிய அமைப்புகளின் ஆதரவோடு இந்தப் பயிலரங்கம் நடத்தப்பட்டது. இதனைத் தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ கைருல் ஸைமி பின் டாவுட் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
டிஜிட்டல், தொழில்நுட்பத்துறைகளைச் சேர்ந்த 20 நிறுவனங்கள் இந்தப் பயிலரங்கில் பங்கேற்றதானது செயற்கை நுண்ணறிவு (ஏஐ), தானியங்கி முறை (ஆட்டோமேஷன்), ஸ்மார்ட் உற்பத்தி போன்ற தொழில்நுட்பங்களில் SME நிறுவனங்கள் உத்வேகத்துடன் பங்கேற்பதை உறுதி செய்வதற்குரிய வகையில் அவற்றின் சிறப்புகள் குறித்து தெளிவான விளக்கங்கள் அளித்ததோடு புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரத்துறைகளில் எஸ்எம்இ நிறுவனங்கள் போட்டியிடுவதற்கு இவை உதவும் என்பது தெளிவுபடுத்தப்பட்டது.
தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத்துறை அமைச்சு மேலும் அதன் கீழ் செயல்படும் துணை நிறுவனமான SME Corp.Malaysia, டிஜிட்டல் மயம், தொழில்நுட்பம் ஆகியவை 13ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் அதன் 5 ஆண்டு காலத்தில் பல்வேறு திட்டங்கள் வழி அமல்படுத்தப்படும் என்று டத்தோஸ்ரீ கைருல் ஸைமி தமதுரையில் சுட்டிக்காட்டினார்.
இது 2030 தேசிய தொழில்முனைவோர் கொள்கை இலக்கிற்கு இணங்க உள்ளது. இதன்மூலம் ஒரு முழுமையான மேலும் விரிவான தொழில்முனைவோர் மேம்பாட்டுக் கட்டமைப்பு உருவாக்கப்படும் என்று அவர் கூறினார்.
அதேசமயத்தில் 13ஆவது மலேசியத் திட்டத்தின் பயணத்தில் உள்ளூர் வணிக நிறுவனங்களை உருவாக்குவதற்குரிய நுண்ணிய, இலக்கு வைக்கப்பட்ட எஸ்எம்இ நிறுவனங்களை அதிகளவில் பயன்படுத்தும் இலக்கில் இருக்கும் என்று எஸ்எம்இ கார்ப் மலேசியா தலைமைச் செயல் அதிகாரி ரிஸால் பின் டத்தோ நைனி தெரிவித்தார். இந்த நிறுவனங்களின் அதீத ஆக்கத்தின் மேலும் மதிப்புகளை அதிகரிக்கும் திறன்களைக் கொண்டிருப்பதோடு உள்நாட்டு, உலகளாவிய சந்தைகளில் போட்டியிடவும் முடியும் என்று அவர் சொன்னார்.


இப்பயிலரங்கமானது 2025ஆம் ஆண்டில் முதல் நிகழ்ச்சி கோலாலம்பூரில் நேற்று நடத்தப்பட்டது. இரண்டாவது நிகழ்ச்சி 2025 நவம்பர் 17ஆம் தேதி சபா கோத்தா கினாபாலுவில் நடைபெறும். இதுபோன்ற முயற்சிகள் எஸ்எம்இ நிறுவனங்கள் அவற்றின் வணிகங்களில் டிஜிட்டல் மாற்றம் மேலும் இதர ஆகக்கடைசியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு வழிகாட்டியாகவும் விழிப்புணர்வைத் தருவதாகவும் இருக்கும். இப்பயிலரங்கமானது தொழில்முனைவோர் மேம்பாடு, எஸ்எம்இ கார்ப் மலேசியா ஆகியவற்றின் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாகும். இது 2030ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை ஓர் ஏஐ நாடாக மாற்றும் இலக்கிற்குப் பக்கபலமாகத் திகழும்.
இப்பயிலரங்கு தொடர் பற்றிய மேலதிக தகவல்களுக்கு: www.smecorp.gov.my என்ற இணையதளத்தையோ அல்லது SME Corp.Malaysia-இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளங்களையோ பார்வையிடவும்.




