ஆனால், 25 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2050ஆம் ஆண்டில், இதேபோன்று நம்மிடம் ரூ.1 கோடி இருந்து இதே திட்டங்களை வகுக்க முடியுமா? இது சற்று கடினம்தான். இதற்கு முக்கியம் பணவீக்கம் ஆகும். உதாரணமாக, நீங்கள் இப்போது 100 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கினால், அடுத்த ஆண்டு அதே பொருளை வாங்க கூடுதலாகப் பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். அந்தப் பொருள் அதே விலையில் இருக்காது. அதன் விலையில் ஏற்றம் இருக்கலாம். பணவீக்கம் காரணமாக, உங்கள் பணத்தின் மதிப்பு குறைகிறது.


