Last Updated:
அங்கீகரிக்கப்படாத தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 கட்சிகளையும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு கட்சியையும் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த அங்கீகரிக்கப்படாத, தேர்தலில் போட்டியிடாத 23 பதிவு செய்யப்பட்ட கட்சிகளை நீக்கும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் எந்தத் தேர்தலிலும் போட்டியிடாத, தேர்தல் ஆணையத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறிய பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகளை அடையாளம் கண்டு பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி, அங்கீகரிக்கப்படாத தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 கட்சிகளையும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு கட்சியையும் பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம், காமராஜர் மக்கள் கட்சி, பசும்பொன் மக்கள் கழகம், மீனவர் மக்கள் முன்னணி, அம்பேத்கர் மக்கள் முன்னணி உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த 22 கட்சிகளையும் புதுச்சேரியைச் சேர்ந்த திராவிட பேரவை கட்சியும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன.
August 12, 2025 8:05 AM IST


