22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நாட்டின் ஜனநாயகத்தை அநுர குமார திஸாநாநாயக்க
தலைமையிலான அரசாங்கம் சீர்குலைக்க போவதாக எதிர்கட்ச்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக ஜனநாயகம் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் பாதிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (24.09.2026) பத்தரமுல்லை பொல்துவ சந்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
“220 இலட்சம் மக்களையும் வாழவைக்க“
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ‘இந்த இழிவான அரசாங்கம் இந்நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டது. அதிக பொய்களைக் கூறிய
ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதி அவர்களை அழைக்கலாம்.

22 ஆவது
அரசியலமைப்புத் திருத்தம் மூலம் முழு நாட்டையும் தனிக் கட்சியின் அதாவது
பெலவத்தை (மக்கள் விடுதலை முன்னணியில் தலைமையகம் அமைந்துள்ள இடம்) ஆட்சிக்கு
உட்படுத்த இவர்கள் முயற்சித்து வருகின்றனர்.
இந்த ஜனநாயகத்திற்கு எதிரான
முயற்சியை மக்கள் பலத்தினாலும் மக்கள் சக்தியினாலும் தோற்கடிக்க வேண்டும்
எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
அவ்வாறே, ஜனநாயகத்தை நாசம் செய்யும் அநுர குமார திஸாநாநாயக்க அரசாங்கத்தை
வீட்டுக்கு அனுப்புவோம்.
நாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களின்
சுபீட்சத்திற்காகவும், மக்களின் நலனுக்காகவும் ஒன்றிணைய முடியுமான சகல ஜனநாயக
மற்றும் தூய்மையான சக்திகளுடனும் நாம் ஒன்றிணைவோம்.
ஐக்கிய மக்கள் சக்தியானது
இந்நாட்டு மக்களுக்கு உள்ள ஒரே மாற்று வழியும் மாற்று அரசாங்கமுமாக
காணப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் பயணத்தை பலப்படுத்தி, மக்கள்
பலத்தினாலும், மக்கள் சக்தியினாலும் அநுர குமார திஸாநாயக்கவின் அரசாங்கத்தை
தோற்கடிப்போம்.
மேலும், இப்போதாவது இந்த உண்மையை, யதார்த்தத்தை உணர்ந்து கொள்ளுமாறு மக்களிடம்
கேட்டுக்கொள்கிறேன்.
இன்று பொல்துவ சந்திக்கு வந்தது ஜே.வி.பி.யினரைப் போல நாடாளுமன்றத்திற்கு தீ வைக்க அல்லவென்றும், அன்றைய அரகலய போராட்ட காலத்தில்
நாடாளுமன்றத்திற்கு தீ வைக்க முயன்றவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் அங்கம்
வகித்து வருகின்றனர்.
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை மக்கள் மத்தியில்
தோற்கடிப்போம். வறுமையை இல்லாதொழித்து, சகல வர்க்கத்தையும் சேர்ந்த மக்களை
பாதுகாத்துக் கொண்டு, ஒட்டுமொத்த 220 இலட்சம் மக்களையும் வாழவைக்கக்கூடிய ஒரு
யுகத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணையுமாறு சகலரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று
எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

