• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸி; 4 விக்கெட்களை இழந்து தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம் | WTC Final | australia all out for 212 runs South Africa struggles losing 4 wickets WTC Final

GenevaTimes by GenevaTimes
June 11, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது ஆஸி; 4 விக்கெட்களை இழந்து தென் ஆப்பிரிக்கா தடுமாற்றம் | WTC Final | australia all out for 212 runs South Africa struggles losing 4 wickets WTC Final
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


லார்ட்ஸ்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா பீல்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கம் அதிர்ச்சியாக இருந்தது. 20 பந்துகளை சந்தித்த உஸ்மான் கவாஜா ரன் ஏதும் எடுக்காமல் காகிசோ ரபாடா பந்தில் முதல் சிலிப் திசையில் நின்ற பெடிங்ஹாமிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய கேமரூன் கிரீன் 4 ரன்கள் எடுத்த நிலையில் இதே ஓவரின் கடைசி பந்தில் 2-வது சிலிப் திசையில் நின்ற எய்டன் மார்க்ரமின் அற்புதமான கேட்ச் காரணமாக நடையை கட்டினார். ஒரே ஓவரில் ரபாடா கைப்பற்றிய இந்த 2 விக்கெட்களும் ஆஸ்திரேலிய அணிக்கு அழுத்தம் கொடுத்தது.

எனினும் ஸ்டீவ் ஸ்மித், தென் ஆப்பிக்க பந்துவீச்சை சமாளித்து சீராக ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் ரன்கள் சேர்க்க தடுமாறிய மார்னஸ் லபுஷேன் 56 பந்துகளில், ஒரு பவுண்டரியுடன் 17 ரன்கள் எடுத்த நிலையில் வியான் முல்டர் வீசிய பந்தை தடுப்பாட்டம் மேற்கொள்ள முயன்ற போது விக்கெட் கீப்பர் கைல் வெர்ரின் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் களமிறங்கிய அதிரடி பேட்ஸ்மேனான டிராவிஸ் ஹெட் விரைவாக ரன்கள் சேர்த்து தென் ஆப்பிரிக்க அணிக்கு அழுத்தம் கொடுக்க முயன்றார்.

ஆனால் 13 பந்துகளில் 11 ரன்கள் சேர்த்த அவர், மார்கோ யான்சன் லெக் திசையில் வீசிய பந்தை பிளிக் செய்தார். அதை கைல் வெர்ரின் அற்புதமாக டைவ் அடித்து கேட்ச் செய்ய டிராவிஸ் ஹெட் ஏமாற்றத்துடன் வெளியேறினார். 67 ரன்ளுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய ஆல்ரவுண்டரான பியூ வெப்ஸ்டர், விரைவாக ரன்கள் சேர்த்தார்.

மறுபுறம் நிலைத்து நின்று விளையாடி தனது 42-வது அரை சதத்தை கடந்த ஸ்டீவ் ஸ்மித் 112 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் எய்டன் மார்க்ரம் வீசிய பந்தில் சிலிப் திசையில் நின்ற மார்கோ யான்சனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 79 ரன்கள் சேர்த்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி 31 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் கேசவ் மகாராஜ் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் விளையாட முயன்ற போது போல்டானார்.

இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ஒரு ரன் எடுத்த நிலையில் காகிசோ ரபாடா பந்தில் போல்டானார். தனது 2-வது அரை சதத்தை கடந்த பியூ வெப்ஸ்டர் 92 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்த நிலையில் ராபாடா பந்தில் முதல் சிலிப்பில் நின்ற பெடிங்ஹாமிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து நேதன் லயன் (0), மார்கோ யான்சன் பந்திலும், மிட்செல் ஸ்டார்க் (1) ரபாடா பந்திலும் ஸ்டெம்பை பறிகொடுக்க ஆஸ்திரேலிய அணி 56.4 ஓவர்களில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா 5, மார்கோ யான்சன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். எய்டன் மார்க்ரம், கேசவ் மகாராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 22 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது.



Read More

Previous Post

இந்திய மக்கள்தொகை 146 கோடியாக உயரும்: ஐ.நா. அறிக்கையில் தகவல் | India s population to increase to one and half billion UN report

Next Post

இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

Next Post
இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin