Last Updated:
நாட்டில் 211 மருந்துகள் தரமற்று இருப்பது அறியப்பட்டுள்ளது. மேலும் 5 மருந்துகள் போலியானதாக இருப்பதும் தெரியவந்துள்ளது.
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் நடத்தப்பட்ட சோதனையொன்றின் முடிவில், நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வந்த 211 மருந்துகள் தரமற்றவை என தெரியவந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த 211 மருந்துகளில் கால்சியம், வைட்டமின் டி3 மாத்திரை, வயிற்றுப்புழுக்களுக்கான மாத்திரைகள், பாக்டீரியா தொற்றுக்களுக்கு எதிரான ஆண்டிபயாடிக் மருந்துகள், பாரசிட்டமால் போன்றவை இருப்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் கடந்த மாதம் (அக். 2025) அனைத்து வகையான மாத்திரை, மருந்துகளும் மத்திய மற்றும் மாநில மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியங்கள் (CDSCO) மூலமாக ஆய்வு செய்யப்பட்டது. அதன் முடிவில்தான், 211 மருந்துகள் தரமற்று இருப்பது அறியப்பட்டுள்ளது. மேலும் 5 மருந்துகள் போலியானதாக இருப்பதும் தெரியவந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில், பல்வேறு மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 349 மருந்துகள் தரமானவை அல்ல என்று கண்டறியப்பட்டுள்ளன. CDSCO தரவுகளின்படி, ஜூலை மாதத்தில் 143 மருந்துகள் தரமானவை அல்ல என்று அடையாளம் காணப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 94 மருந்துகளும், செப்டம்பரில் 112 மருந்துகளும் தரமற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளன.

November 25, 2025 2:01 PM IST


